Monday, February 8, 2010

அச‌ல்‍-விம‌ர்ச‌ன‌ம்


விஜய்க்கு சரியான போட்டியாளன் தான் மட்டுமே என்பதை நிரூபிக்க சரண் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்தான் அசல்.

அப்பா அஜித்திற்கு,இரண்டு மனைவிகள்.மூத்த மனைவிக்கு பிறந்தவர்கள் சம்பத்தும்,ராஜிவ் கிருஷ்ணாவும்.இரண்டாவது மனைவியின் பிள்ளை அஜித்.இதில் அப்பாவிற்கு விசுவாசமான 'அசல்' பிள்ளை யார் என்பதுதான் அசல் படத்தின் கதை.

படத்தின் பெரும் பகுதி ஃப்ரான்சில் நடப்பதால் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் காட்சிகளெல்லாம் அழகாக இருக்கின்றன்.'Fashion Show'-ல் மாடல்கள் நடப்பது போல் இன்னும் எத்தனை படங்களில் அஜித் இப்படியே நடந்து கொண்டிருக்கப் போகிறாரோ தெரியவில்லை.படத்தின் டைட்டிலில் 'கோ-டைரக்டர்' மற்றும் கதை,திரைக்கதை,வசனம் உதவி 'அஜித்' என்று போட்டிருந்ததைப் பார்த்த பொழுது,சரணுக்கு தன்னுடைய படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக,பதிலுக்கு சரண் பண்ணிய உதவியோ என்று தோன்றியது.முழுப் படத்தையும் பார்க்கும் பொழுதுதான் அஜித் உண்மையிலேயே 'Involve(?)' பண்ணியிருப்பது தெரிகிறது.தன் பெயருக்கு முன்னால் 'அல்டிமேட் ஸ்டார்' என்று போடுவதை இந்தப் படத்திலிருந்து நிறுத்தியிருப்பது போல்,படத்தின் வசனங்களிலும் 'தலை' என்பதைத் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.அதைத் தொடர்ந்து கேட்கும் பொழுது நமக்குத்தான் 'தலை' வலிக்கிறது.

யூகி சேதுவின் சில காட்சிக‌ளும்,பட‌த்தின் இர‌ண்டாம் ப‌குதியில் ச‌மீரா ரெட்டியும்,பாவ‌னாவும் பேசிக் கொள்ளும் சில‌ வ‌ச‌ன‌ங்களும் நன்றாக‌ இருக்கின்றன.எல்லாப் படங்களிலும் 'ஹீரோ' பறந்து பறந்து அடியாட்களை அடிப்பார்.இந்தப் படத்தில் 'பறந்து பறந்து' வரும் அடியாட்களை 'ஹீரோ' அடிக்கிறார்.‌டைரக்டருக்கு அஜித்துடன்,பாவனாவைத்தான் கடைசியில் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால்,சமீரா கேரக்டரையே,பாவனாவிற்கு கொடுத்திருந்திருக்கலாம்.

ஒரு திறமையான‌ பேட்ஸ்மேன்,மிக‌ச் சாத‌ர‌ண பாலுக்கு அவுட்டாவ‌து போல்,அஜித் போன்ற ந‌ல்ல‌ ந‌டிக‌ர் 'அச‌ல்' மாதிரி ப‌ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுத்து ந‌டிப்ப‌தைப் பார்க்கும் பொழுது வ‌ருத்த‌மாக‌த்தான் இருக்கிற‌து.

இந்த‌ப் ப‌ட‌ம் பார்த்த‌திலே ஏற்ப‌ட்ட‌ ஒரே உருப்ப‌டியான‌ விச‌ய‌ம் 'Mercy' என்கின்ற‌ ஃபிரென்ச் வார்த்தைக்கு 'ந‌ன்றி' என்பது‌ அர்த்த‌ம் என்பதைத் தெரிந்து கொண்ட‌துதான்.

அச‌ல்‍-ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் நக‌ல்.

8 comments:

  1. படம் பர்க்கவில்லை.பார்துவிட்டு செல்கிறேன் எனது கருத்தை

    ReplyDelete
  2. ரொம்ப மொக்கயொ..

    ReplyDelete
  3. MERCI என்றால் French-இல் Thanks என்பதை கற்றுக் கொள்ள உபாதையில்லாத வழிகள் நிறைய இருக்கின்றனவே ... Anyways எச்சரித்ததற்கு MERCI :)

    ReplyDelete
  4. @ கா.பழனியப்பன்!

    என்னை விட,உனக்கு இந்தப் படம் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  5. @ ஆனந்த் [ பேநா மூடி ]!

    ஆமாம் ஆனந்த் :-)

    ReplyDelete
  6. @ Nundhaa!

    ஹாஹாஹா!வருகைக்கு மிக்க நன்றி நந்தா!

    ReplyDelete
  7. Thanks for the advice... i guess it would be like this.

    ReplyDelete
  8. @ Mathan elango!

    Thanks for Your Comment:-)

    ReplyDelete