Tuesday, February 2, 2010
கோவா-திரை விமர்சனம்
கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் மூன்று இளைஞர்கள்,ஊர் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு,ஒரு 'உயர்ந்த' இலட்சியத்துடன் கோவா செல்கிறார்கள்.தங்களுடைய இலட்சியத்தை அவர்களால் அடைய முடிகிறதா என்பதுதான் கோவா படத்தின் கதை.
இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு தன்னுடைய முந்தையப் படங்களைப் போலவே பழைய படங்களை நன்றாகவே கிண்டலடித்திருக்கிறார்.ஜெய்,பிரேம்ஜி அமரன்,வைபவ் காதலோடு 'இன்னொரு' காதலும் ஒரே ட்ராக்கில் போவது நன்றாகவே இருக்கிறது.ஜெய்-பியா,பிரேம்ஜி அமரன்-வெள்ளைக்காரப் பொண்ணு காதலோடு ஒப்பிடும்போது,வைபவ்-சினேகா காதல் படத்துடன் ஒட்டவே இல்லை.வெள்ளைக்காரப் பொண்ணை ரொம்ப நன்றாகவே நடிக்க வைத்திருக்கிறார்கள்.சம்பத்தை தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே,இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு 'அழகாகப்' பயன்படுத்தியிருக்கிறார்.சிம்புவையும் மிக அழகாக கதைக்குள் பொருந்திப் போகச் செய்திருப்பது வெங்கட் பிரபு 'டச்'.
6 Packs coming soon,தமிழ் நாட்டையே உங்களுக்கு கொடுக்கிறேன்னு சொல்லி-தமிழ்நாடு மேப்பைக் கொடுப்பது என்று பல சின்ன சின்ன விசயங்கள் நன்றாகவே இருந்தாலும்,முழுப் படமாகப் பார்க்கும் போது பல காட்சிகள் மனதில் ஒட்டாமலேயே இருக்கின்றன.எமோஷனாலான சில காட்சிகளையும் காமெடியாக மாற்றும் பொழுது சிரிக்கவும் முடிவதில்லை.அதிகமான பாடல்களும் படத்தின் வேகத்திற்கு தடையாகவே இருக்கின்றன.
கோவா-'பாண்டிச்சேரி'.
Subscribe to:
Post Comments (Atom)
அதிக பாடல்கள் கண்ணுக்கு குளிர்ச்சியா இல்லையா என்பதையும் விளக்கி இருக்க வேண்டும்.
ReplyDeleteகவனிக்கவும்: காதுக்கு இனிமையா என்பதை பற்றி கவலை இல்லை.
சம்பத்தும்,அந்த வெள்ளைக்காரப் பெண்னும் பாரட்டுக்குறியவர்கள்.
ReplyDeleteயுவனின் 'கோவா' பாடல் இனிமை.
கோவா ஒரு ஜாலி ட்ரிப்
@ laguda paandi!
ReplyDeleteகோவாவில் பாடல்கள் எடுக்கப்பட்டிருக்கிறதாலே,கண்ணுக்கு 'குளிர்ச்சி' யா இருக்குங்க.வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!
@ கா.பழனியப்பன்!
ReplyDeleteஉண்மையிலெயே மற்ற எல்லா ஹுரோயின்களையும் விட,அந்த வெள்ளைக்காரப் பொண்ணு நன்றாகவே நடித்திருந்தது. நன்றி பழனி!