Monday, February 15, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை‍-திரை விமர்சனம்


இன்றைய இளைஞர்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுப்பது கல்வியா?செல்வமா?வீரமா? என்பதைச் சொல்ல 'முற்போக்கு சிந்தனையுடன்(?)' வந்திருக்கும் படம்தான் 'தீராத விளையாட்டுப் பிள்ளை‍'.

தான் தேர்ந்தெடுக்கும் எதுவுமே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் விஷால்,கல்யாணம் என்று வரும்போது,மூன்று பெண்களைக் காதலித்து,அந்த மூவரில் மிகச் சிறந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறார்.இதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் மூன்று பெண்கள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் சரா ஜானே,கோடீஷ்வரியான நீத்து சந்திரா,விளையாட்டில் சிறந்த தனுஸ்ரீ தத்தா.இந்த மூன்று பெண்களில் விஷால் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதுதான் தீராத விளையாட்டுப் பிள்ளை‍யின் கதை.

ஆக் ஷன் அதிரடியைக் கைவிட்டு விட்டு இந்த மாதிரி படத்தில் 'நடிக்க' முயற்சித்ததற்காகவே விஷாலைப் பாராட்டலாம்.மூன்று பெண்களும் அறிமுகமாகும் போது 'யுவன் சங்கர் ராஜா' கொடுக்கும் 'Intro Music' நன்றாக இருக்கிறது.படத்தின் மிகப் பெரிய பலமே சந்தானம்,மயில்சாமி,சத்யன் இவர்களோடு விஷால் சேர்ந்து பண்ணும் காமெடிதான்.இதுக்கும் மேல காசு புரட்டனும்னா 'ட்ரெயினைத்தான்' போய் நிப்பாட்டனும் என்று சத்யன் சொல்வதெல்லாம் 'ரொம்பவே' ஓவர்.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை தமிழ்ப்படம் பார்ப்பவர்கள் கூட ஆரம்பத்திலேயே மிக எளிதாகச் சொல்லிவிடலாம்,விஷால் எந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று.தன்னைப் போலவே மற்ற இரு பெண்களையும் விஷால் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வரும்போது,அந்த பெண்ணை விஷால் உடனே நிராகரிப்பதும்,அந்த பெண்தான் ஏதோ தப்பு செய்தது போல் பழியைத் தூக்கிப் போட முயற்சிப்பதும் உறுத்தலாக உள்ளது.'Annonymous' இடமிருந்து ஒரு பெண் 'பாம்' வைத்திருப்பதாக வரும் 'Call'கெல்லாம் 'போலீஸ்' இப்படித்தான் நடந்து கொள்வார்களா எனத் தெரியவில்லை.மூன்று ஹுரோயின்களில் தனுஸ்ரீ தத்தாதான் நடிப்பு,கவர்ச்சி என்று இரண்டுக்கும் வழி இல்லாமல் 'தேமே' வென்று இருக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்."உண்மையான காதல் எதையும் சந்தேகப்படாது,அப்படி சந்தேகப்பட்டால் அந்தக் காதல் நிலைக்காது" என்பதை சொல்ல வந்த படம்,அதைச் சொல்லிய முறையில் கொஞ்சம் சொதப்பினாலும்,'ஜாலியாக' இரண்டரை மணி நேரத்தை செலவழிக்க விரும்பினால்,இந்தப் படத்திற்கு போகலாம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை‍-நான் அவன் இல்லை

13 comments:

  1. 'ஜாலியாக' இரண்டரை மணி நேரத்தை செலவழிக்க விரும்பினால்,இந்தப் படத்திற்கு போகலாம்.


    அட ஏங்க நீங்க வேற.

    ReplyDelete
  2. நீங்க யாரையாவது பழி வாங்க விரும்பினால் இந்த படத்தோட டிக்கெட்ட தாராளமா அவருக்கு ஓசியா வாங்கி தரலாம் ... மத்தத விஷால் ரெண்டர மணி நேரம் பாத்துபாரு...

    ReplyDelete
  3. விஷாலை இதுல ரொம்ப அழகா காட்டி இருக்கிறதா எல்லாரும் (Crew) சொன்னாங்க.
    இந்த மாதிரி லூசுத்தனமா இருக்கிறதுக்கு பேரு அழகு இல்லை. விஷால் சண்டைக்கோழியிலையும்,
    செல்லமே'லையும் நல்லா இருப்பாரு. அந்த மூணு பேரும் ஹீரோயின் மாதிரியா இருக்காங்க?
    சே..டைரக்டருக்கு ஒரு ரசனையே இல்லைங்க..

    ReplyDelete
  4. ஒரு படத்தை எவ்ளோ அழகா பிரசண்ட் பண்ணனும் அப்படின்னு கூட தெரியலை.
    இவங்களை யெல்லாம் மொதல்ல ஹாப்பி டேஸ், கொத்த பங்காரு லோகம், ஃபனா, இந்த மாதிரி படங்களை பார்க்க சொல்லுங்க..

    காதலை மையமா இருக்கிற படத்துல ஒரு Feel இல்லைங்க.

    //ஆக்ஷன் அதிரடியைக் கைவிட்டு விட்டு இந்த மாதிரி படத்தில் 'நடிக்க' முயற்சித்ததற்காகவே விஷாலைப் பாராட்டலாம்.//

    நச் கமெண்ட் சார்

    ReplyDelete
  5. இந்த மாதிரி படம் எல்லா நல்லா வசூல் ஆகுறதுனாலதா யாரு இப்ப எல்லா சீரியசான படம் எடுக்குறது இல்ல.
    விஷாலூக்கு நல்ல எதிர்கால இருக்கும் போது இந்த மாதிரி படம் அவருக்கு தேவையா ?
    நகைச்சுவை பன்னும் போது விஜய் மாதிரி அவர் ஏ முயற்ச்சி செய்யனும் ?..

    ReplyDelete
  6. ithu telugu remake.. chukkallo chandrudu

    ReplyDelete
  7. விஜய் தான் விஷாலுக்கு குரு ....ஆனால் சொதப்பலுக்கு இவர்தான் எல்லோருக்கும் மஹா ஸ்ரீ குரு
    ஆக்‌ஷன் படம்தான் விஷாலுக்கு சரி

    ReplyDelete
  8. @ ஜீவன்பென்னி!

    சன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் இருக்குறதுனாலே ரொம்ப பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  9. @ ராஜா" from புலியூரான்!

    கருத்துக்கு நன்றிங்க.உண்மையைச் சொல்லனும்னா படம் 2:45 நிமிடங்கள் ஓடுகிறது ராஜா:-)

    ReplyDelete
  10. @ கவிதை காதலன்!

    கருத்துக்கு நன்றிங்க!
    //காதலை மையமா இருக்கிற படத்துல ஒரு Feel இல்லைங்க.//

    இது 100 ச‌த‌வீத‌ம் உண்மைங்க‌!

    ReplyDelete
  11. @ கா.பழனியப்பன்!

    ஆக்சன் படத்துல நடிச்சே விஷாலாலே மக்களை சிரிக்க வைக்க முடியுதுன்னா,காமெடி படத்துல இன்னும் சிரிக்க வைக்க முடியும்னு டைரக்டர் நினைச்சுருப்பாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. @ Anonymous!

    சில வருடங்களுக்கு முன் 'chukkallo chandrudu' கொஞ்ச‌ நேர‌ம் பார்த்தேன். ப‌ட‌ம் பிடிக்க‌லைன்ற‌தாலே,தொட‌ர்ந்து பார்க்காம விட்டுட்டேன்.அத‌னாலே,அந்தப் பட‌ம்தான் இந்த‌ப் ப‌ட‌மான்னு தெரிய‌லைங்க‌.

    ReplyDelete
  13. @ goma!

    கருத்துக்கு நன்றிங்க!

    ReplyDelete