Wednesday, September 23, 2009

சொற்கொலை



என்னிடமிருந்து சொற்கள்
ஒவ்வொன்றாய்
உனை நோக்கி
நகரத் தொடங்கிய ஒரு கணத்தில்
யாதொரு கார‌ணம‌மும் இன்றி
ஏழு மலைகளுக்கு அப்பால் போய்
ஒளிந்து கொண்டாய்
என்னிடமும் திரும்பி வர முடியாமல்
நீ இருக்கும் இடமும் தெரியாமல்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
அவை ஒவ்வொன்றாய்
தற்கொலை செய்யத் தொடங்கின
என்றாவது ஒருநாள்
துர்கனவின் நடுவில்
நீ விழிக்க நேர்கையில்
அவற்றின் ஆன்மா சாந்தி அடையக்கூடும்...



Saturday, September 19, 2009

உன்னை போல் ஒருவன்‍-விமர்சனம்




இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் விளையாடி தோற்றாலும் சரி,கொல்கத்தாவில் தோற்றாலும் சரி,எப்படி ஒட்டு மொத்த தேசமே அது குறித்து கவலைப்படுகிறதோ அது போல,நாட்டின் எந்த பகுதியில் தீவிரவாதத்தால் குண்டு வெடித்தாலும் ஒட்டு மொத்த தேசமே அதை எதிர்த்துப் போராட வேண்டும்.அதேபோல் தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை,தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்பதுதான் 'உன்னை போல் ஒருவன்' படத்தின் கதை.

இந்த மாதிரி ஒரு 'கதையுள்ள' படத்தை ரீமேக்கியதற்காகவே கமலையும்,இயக்குனரையும் பாராட்ட வேண்டும்.அதேபோல் ஒரிஜினல் படத்திற்கும்,இதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக் கொண்டதற்காகவும்.ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயர் 'ஒன் டே மேட்சில்' ஒரு 'Style'-‍ லும் டெஸ்ட் மேட்சில் மற்றொரு 'Style'-‍ லும் விளையாடுவது போல் கமல்,மோகன்லால் இருவருமே விளையாடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவிற்கு அப்புறம் படத்தில் தனிப்பட்டு பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விஷயம் படத்தின் வசனங்கள்.பல இடங்களில் நம்மை 'அட' போட வைக்கிறார் வசனகர்த்தா இரா.முருகன்.'இந்திய கிரிக்கெட் டீம் தோத்தால் யாரும் டீ.வி.சேனலை குறை சொல்ல மாட்டார்கள்';குஜராத்தில் போய் 'மோதி' ப் பார் என்பதில் தொடங்கி;எனக்கு 'இடது வலது' பேதமில்லை என்று கமல் நைஸாக கம்யூனிஸத்தை நுழைப்பது வரை படம் முழுவதும் வரும் வசனங்கள் அருமை.முதலமைச்சருனுடைய வீட்டு 'கேட்டி'ல் தெரியும் 'உதய சூரியன்' சின்னம் முதற் கொண்டு,படத்தில் வரும் எல்லா காட்சிகளையுமே ஒவ்வொன்றாக பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை நன்றாகவே இருந்தாலும் கடைசி காட்சிகளில் ஏற்படவேண்டிய 'ஜீவன்' குறைவதற்கு அவையே ஒரு காரணமோ என்று தோன்றுகிறது,இருந்தாலும்,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல 'த‌மிழ் படத்தை' பார்க்க வாய்ப்பளித்தற்கு கமலையும்,இயக்குனரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உன்னை போல் ஒருவன்‍‍- 'தலைவன் இருக்கிறான்'

Friday, September 18, 2009

கம‌ல்-50(55)*




கமலைப் பற்றி ஏற்கெனவே எல்லோரும் எவ்வளவோ சொல்லிட்டாங்க.ஆனால் கமல்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் அவருடைய கடின உழைப்பு,விடா முயற்சி,மனம் தளராமை,புது புது விஷயங்களை கத்துக்கிறது மட்டுமில்லை.நாம எல்லோரும் அவர்கிட்ட கத்துக்கிறதுக்கு பல விஷயங்கள் இருந்தாலும்,ஒரு விஷயம் மட்டும் எல்லோருக்குமே பொருந்தும்னு தோணுது.

கமலுக்கு பிடிச்ச விஷயம்‍,தொழில்-நடிப்பு.அந்த நடிப்பில் தன்னை உயர்த்திக்கிறதுக்காக அதற்கு துணை நிற்கும் விஷயங்களான கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,தயாரிப்பு மற்றும் சினிமாவில் வரும் புது புது Technologies எல்லாத்தையும் கத்துக்கிட்டாலும்,அவை எல்லாவற்றையும் தன்னுடைய நடிப்பை உயர்த்திக்கிறதுக்காக மட்டும்தான் பண்ணுவாரு.அதனால்தான் இப்பொழுதும் அவரால் புது புது வேடங்களை ஏற்று சிறப்பாக நடிக்க முடிகிறது.இப்ப இருக்கிற சில இயக்குனர்கள் மாதிரி,தனக்கு எது நன்றாக வருமோ அதை விட்டு விட்டு,நடிகனாகியே தீரனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு தங்களுடைய உண்மையான திறமையையும் இழப்பது போல் கமல் செய்வதில்லை.எல்லா விஷயங்களையும் படிப்படியாகத்தான் கத்துக்கிட்டார்.நூற்றி ஐம்பது படங்கள் நடித்த பின்புதான் தன் முதல் படத்தையே இயக்கினார்.அதற்கு முன்பு கூட சில படங்களுக்கு கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு என்று ஆரம்பித்து கடைசியாகத்தான் தன்னுடைய படங்களை இயக்கவும் ஆரம்பித்தார்.இதெல்லாம் பண்றதாலதான் அவரால் இப்பொழுதும் நடிப்பில் நம்பர்-1 இடத்தில் இருக்க முடிகிறது.


நாம எந்த வேலை வேணும்னாலும் பண்ணலாம்.ஆனால் நாம பண்ற வேலையில் நம்பர்-1 ஆக இருக்க வேண்டுமெனில்,நம்மளுடைய வேலையை நன்றாக பண்ணுவதற்கு துணை நிற்கும் மற்ற விஷயங்களை தெரிந்து கொண்டாலே போதுமானது. நீங்க Developer-ஆக இருக்கலாம்.ஆனாலும் Testing கத்துக்கிறது உங்களை இன்னும் நல்ல Developer-ஆக உருவாக்கும். Tester-ஆக இருந்தால் Development பற்றி தெரிஞ்சுகிறது,உங்களை நல்ல Tester-ஆக உருவாக்கும்.நீங்க Development பற்றி தெரிஞ்சுக்கிட்ட‌துனால Field மாறனும்னும் அவசியம் இல்லை.கமல் மாதிரி,இருக்கிற துறையிலேயே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு King-ஆக இருக்கலாம்.

Saturday, September 12, 2009

ஈர‌ம்‍‍‍-விமர்சனம்


மனிதனுடைய வாழ்க்கையில் சந்தோஷம்,கோபம்,வலி,கவலை மாதிரி காதலும் ஒரு முறை ஒரே ஒருவரிடம் மட்டும் வரும் என்று கிடையாது என்ற அழகான கருத்தை சொல்லும் படம்தான் ஈரம்.

கல்யாணத்திற்கு முன்பு ஒருவனிடம் ஏற்பட்ட காதலால், கல்யாணத்திற்கு பின்பு சந்தேகப்படும் கணவனால் ஒரு பெண் படும் வேதனையை, பேயின் துணை கொண்டு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் இறந்து விட, அதை துப்பறிய வருகிறார் A.C.P ஆதி.அதன் பின் தொடர்ந்து அதே குடியிருப்பில் வசிக்கும் மேலும் சிலரும் இறந்து விட, அவையெல்லாம் தற்செயலான மரணங்களா? இல்லை கொல்லப்பட்டார்களா? என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை முதல் பாதியில் நம்மை நிமிர வைத்தும், இரண்டாம் பாதியில் நெளிய வைத்தும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஆதி,சிந்து மேன‌னுக்கு இடையில் காலேஜில் ந‌ட‌க்கும் காத‌ல் காட்சிக‌ள் அனைத்தும் பின்ன‌ணியில் வ‌ரும் ம‌ழை போல‌ குளுமை.அவ‌ர்க‌ளை P.G ப‌டிப்ப‌துபோல் காட்டியிருந்திருக்க‌லாம்.காதலுக்கும்,நட்புக்கும் இடையில் இருக்கும் நூலிலை வித்தியாசத்தை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.ப‌ட‌த்தில் வ‌ரும் வ‌ச‌னங்க‌ள் ப‌ல‌ இடங்க‌ளில் நன்றாக‌ இருக்கிற‌து."ம‌ச்சான் அவ‌ளை உன‌க்குத் தெரியும்னு சொல்ல‌வேயில்லை;பொய்யெல்லாம் அப்ப‌ப்ப‌தான் சொல்லணும்".ப‌ட‌த்தின் ஒளிப்ப‌திவும்,இசையும் அருமை.

ஃப்ளாஷ்பேக் முடிந்த‌வுடனே,கொலையாளி யார் என்பது தெரிந்துவிடுவதால்,ப‌ட‌த்தையும் சீக்கிர‌ம் முடித்திருந்திருக்க‌லாம். பெண் புத்தி பின் புத்தி என்ப‌து தெரியும்,அதற்காக‌ பெண் பேயின் புத்தியுமா? ப‌ட‌த்தின் கிளைமாக்ஸில் நந்தா மூல‌ம்,பேய் செய்‌வ‌தை முன்னாடியே செய்திருக்க‌லாம்.

ஈர‌ம்‍-முதல் பாதி ம‌ட்டும்.

Wednesday, September 2, 2009

Top 10 Songs-August

இந்த மாதத்திலிருந்து தமிழில் எனக்குப் பிடித்த பத்து பாடல்களைப் பட்டியலிடலாம் என நினைக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே பாடல்களைக் கேட்க முடிவதால்,பெரும்பாலான பாடல்கள் மெலடிகளாக இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.எனக்கு சென்ற மாதத்தில் பிடித்த பத்து பாடல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்,இதில் தரவரிசை ஏதுமில்லை.நல்ல பாடல்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.



1) ஆதவன்-அன்பே மனம்(Hasili Fisiliye)-‍இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0002003

2) கண்டேன் காதலை-நான் மொழி அறிந்தேன்-‍இசை:வித்யாசாகர்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001999

3) நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே‍-‍இசை:விஜய் அந்தோனி
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001994

4) ஈரம்-‍‍‍தரை இறங்கிய‍‍-‍இசை:தமன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001997

5) அங்காடி தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍உன் பேரை சொல்லும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001921

6) ஆயிர‌த்தில் ஒருவ‌ன்-மாலை நேர‌ம்-இசை:G.V.பிரகாஷ்குமார்
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.11639/

7) யாதுமாகி-பார்த்ததும் கரைந்தேனடி-இசை:ஜேம்ஸ் வசந்தன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001988

8) அச்ச‌முண்டு அச்ச‌முண்டு-க‌ண்ணில் தாக‌ம்-இசை:கார்த்திக் ராஜா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001923

9) திரு திரு துரு துரு-ஜில்லென வீசும்-இசை:மணிசர்மா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001996

10) ஆறுமுக‌ம்-எந்தன் ராஜாதி-இசை:தேவா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001966