பிறந்தவுடனே சாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த குழந்தை ஒன்று,எப்படி 'வளர்ந்தவுடன்' பெரிய ஹீரோவாகிறது (அ) தன்னுடைய பேரனைப் பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக,ஒரு பாட்டி அனுபவிக்கும் இன்னல்களும்,துயரங்களும் கொண்ட 'கண்ணீர் காவியம்தான்' தமிழ்ப்படம் (அ) அட போங்கப்பா....கதையா இப்ப முக்கியம்.
வெங்கட்பிரபு தன்னுடைய படங்களில் சின்னதாக ஆரம்பித்து வைத்த ஒரு விசயத்தையே 'முதலாகக்' கொண்டு,எல்லோரும் இரசிக்கக்கூடிய வகையில்,முழுப்படத்தையும் காமெடியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதன்.
கருத்தம்மா,தளபதி,பாட்ஷா,பாய்ஸ்,காதலுக்கு மரியாதை,7G ரெயின்போ காலனி,நாயகன்,சிவாஜி,மொழி,கஜினி,தூள்,மௌன ராகம்,காதலன்,காக்க காக்க,அபூர்வ சகோதரர்கள்,வைதேகி காத்திருந்தாள்,பாண்டவர் பூமி,சமுத்திரம்,அந்நியன்,ரன்,கந்தசாமி,போக்கிரி,பில்லா...இப்படி ஹிட்டான படங்களையே கிண்டல் பண்ணுவதால்,படத்தோடு ஒன்றி,எல்லாக் காட்சிகளையும் இரசிக்க முடிகிறது.
ஹீரோ சிவா ஒவ்வொரு வில்லன்களையும் கொல்வதற்குப் பயன்படுத்தும் 'உக்தி' யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு 'அட்டகாசமாக' உள்ளது.தன்னை நெருங்கவிடாமல் செய்ய, வில்லன் ஏற்படுத்தும் மின்சாரம்,புயல்,தீ போன்ற மூன்று தடைகளை முறியடிப்பதாகட்டும்,முக்கியமான வேலையாக(?) பாண்டிச்சேரி செல்வதற்காக மேலதிகாரியிடம் 'லீவ்' அப்ளை பண்ணுவதாகட்டும், சிவாவைத் தவிர இந்தப் படத்திற்கு ஹீரோவாக வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.படத்தில் ஹீரோவின் குடும்பப் பாடல் வரும்பொழுது சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
இந்தப் படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் வசனகர்த்தாதான்.'நான் சாகறதுக்குள்ளே பரத நாட்டிய அரங்கேற்றம் பண்ணனும்-அப்ப உங்களுக்கு சாவே வராதா' என்று காட்சிக்கு காட்சி நம்முடைய வயிற்றைப் பதம் பார்க்கிறார்.படத்தின் மிகப் பெரிய மற்றொரு பலம்,படத்தின் டைரக்டர் எல்லாவற்றையும் 'மாற்றி யோசி'த்திருப்பது.பொதுவாக தமிழ் படங்களில் ஹீரோவின் வயது '50'ற்கு மேல் இருந்தாலும் அவரின் நண்பர்களின் உண்மையான வயது '25' ஆக இருக்கும்.ஆனால் இந்தப் படத்தில் ஹீரோவிற்கு 25 வயது. அவருடைய நண்பர்களுக்கெல்லாம் வயது '50'ற்கு மேல்.கிட்டத்தட்ட 'எல்லா' காட்சிகளையும் இப்படி 'உல்டா' வாக்கியிருப்பதுதான் படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்கிறது.இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் படம் தொய்வாக செல்வது ஒரு குறை.
பாலசந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,மணிரத்னம்... போன்றோரின் பல படங்களால் எப்படி தமிழ் சினிமா மற்றொரு தளத்திற்கு சென்றதோ,அதேபோல் இந்தப் படமும் கூட மாற்றத்தைக் கொண்டு வரலாம்.இனி வரும் படங்களில் எந்த ஹீரோவும் 'பஞ்ச்' டயலாக் பேசினாலோ அல்லது 'Opening Song'-ல் 'பந்தா' காட்டினாலோ,மக்கள் மனதில் இந்தப் படம் ஞாபகத்திற்கு வந்து சிரிப்பைக் கூட உண்டு பண்ணலாம்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களும் '2011'ல் முதலமைச்சர் பதவிக்கு கனவு கொண்டிருக்கும் இந்த வேளையில்,இந்தப் படத்தை எடுத்ததற்காக தயாரிப்பாளரை,அவருடைய தாத்தா,அப்பா,சித்தப்பா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கண்டிப்பாகப் பாராட்டியிருப்பார்கள்.
தமிழ்ப்படம்-I.S.I முத்திரை குத்தப்பட்ட 'அக்மார்க்' தமிழ்ப்படம்
பாடல்களை தவிர்துவிட்டுப்பார்தால்
ReplyDeleteஇது ஒரு மொக்க படம்
நல்ல படம்.. நல்ல பதிவு...,
ReplyDeleteசினிமாபட்டியில் காட்டப்படும் அந்த ரயில்நிலையமும் அது சார்ந்த பின்புலங்களும்,ஒளிப்பதிவும்
ReplyDeleteஆங்கிலபடங்களில் வருவதுபோல் அருமையாக இருந்தது
@ கா.பழனியப்பன்!
ReplyDeleteஅதிக எதிர்பார்ப்புகளோட போனதினால்,படம் ஒரு வேளை பிடிக்காமல் போயிருந்திருக்கலாம்.படம் முழுவதும் கேமிராவும்,இசையும் நன்றாகவே இருந்தன. நன்றி பழனி!
@ பேநா மூடி!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றிங்க!தொடர்ந்து வருகை தாருங்கள்!
hi
ReplyDelete@ Anonymous!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றிங்க :-)
nice review.... makes me to watch this movie...
ReplyDeletenice review... makes me to watch this movie...
ReplyDelete@ Mano!
ReplyDeleteThanks Mano :-)
எல்லோரும் பாராட்டும் படமாக உள்ளதே!!
ReplyDelete@ தேவன் மாயம்!
ReplyDeleteபடம் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்!கருத்துக்கு மிக்க நன்றிங்க!