Friday, December 4, 2009

ஊடல்


உன்னை பிரிந்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஓடாத கடிகாரம் போல்
அசைவற்றுக் கிடக்கிறேன்!
*******
ஆறு வளைகையில்
கரையும் வளைவது போல்
நீ சிரிக்கையில்
நானும் சிரிக்கிறேன்
நீ அழுகையில்
நானும் அழுகிறேன்!
*******
ஊடலுற்ற ஒரு தருணத்தில்
காய்கறிகளை நறுக்கிக்கொண்டே
என் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
வெட்டத் தொடங்கினாய்
கடைசியில்
காயம் பட்ட உன் விரல்களுக்கு
என் வார்த்தைகளே மருந்தாகியது!
*******

12 comments:

  1. அட்ராசக்கை..அட்ராசக்கை...
    கவித..கவித..
    அழகான வரிகள்,ஆழமான காதலோ!!!மோகன்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தலைவா பின்னிட்டிங்க போங்க.

    ReplyDelete
  3. @பூங்குன்றன்.வே

    தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ நன்றி!தொடர்ந்து வருகை தாருங்கள்!

    ReplyDelete
  4. @ கா.பழனியப்பன்

    நன்றி பழனி!

    ReplyDelete
  5. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  6. கவிதை பிரிச்சி கட்டுது போங்க...
    சும்மா நல்லா இருக்குங்கற வார்த்தை பத்தாது

    ReplyDelete
  7. EXCELLENT !!

    ஆறு வளைகையில் உவமை... இது வரை படிக்காதது.

    ReplyDelete
  8. அண்பு நண்பரே -

    உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
    நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
    அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

    என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  9. @கமலேஷ்

    ரொம்ப நன்றி கமலேஷ்!

    ReplyDelete
  10. @ பின்னோக்கி

    ரொம்ப நன்றி பின்னோக்கி!

    ReplyDelete
  11. @ Imayavaramban

    ரொம்ப நன்றி.கண்டிப்பாக படிக்கிறேன் இமயவரம்பன்!

    ReplyDelete
  12. எனது முத்த வருகை! கவிதை அழகு! மீண்டும் வருவேன் , இன்ஷாஅல்லாஹ்!

    ReplyDelete