Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன்-விமர்சனம்

பாபு சிவன் இயக்கத்தில், விஜயின் 49- வது படமாக வெளிவந்திருக்கும் படம்தான் 'வேட்டைக்காரன்'. ஏற்கெனவே 'ஃப்ளாப்' ஆன 'சத்யம்' படத்தோட கதையவே உல்டா பண்ணி வேட்டைக்காரனாக எடுத்திருக்கும் பாபுசிவன்,விஜய் இருவரின் 'மன உறுதியையும்' கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.முந்தைய படங்களில் திருப்பாச்சி,மதுரை..யிலிருந்து சென்னைக்கு வருவது போல்,இந்தப் படத்தில் விஜய் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வருகிறார்.இந்தப் படத்திலும் சின்ன வில்லன்,பெரிய வில்லன் மற்றும் இன்னும் கொஞ்சம் பெரிய வில்லனோடு மோதி அவர்களை துவம்சம் செய்கிறார்.

திருப்பாச்சி படத்திலாவது விஜய் முகத்தில் சந்தனம் பூசியிருப்பதால் வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருந்தது. ஆனால்,இந்தப் படத்தில் டைரக்டர்,இன்னும் பல படி மேலே போய்,விஜய் நெற்றியில் மஞ்சள் கலர் ரிப்பன் இல்லையென்றால்,வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாதபடி 'வித்தியாசமாக' யோசித்திருக்கிறார்.வேட்டைக்காரனை பார்க்கும் பொழுதுதான் அழகிய தமிழ் மகன்,வில்லு படங்களின் அருமை தெரிகிறது.

விஜயின் தீவிர ரசிகர்களுக்கே படத்தின் இரண்டாவது பாதி பிடிக்குமா என்று தெரியவில்லை.விஜயிற்கு பின் சினிமா உலகில் நுழைந்து,அவரோட நடிப்பை 'காப்பி' அடித்த நடிகர்களே,இன்று வித்தியாசமான (அ) நல்ல படங்களில் நடிக்க முயற்சிக்கும் பொழுது,விஜய் மட்டும் 'ஒரே' மாதிரி படங்களில் நடிப்பதை பார்க்கும் பொழுது அவர் மேல் பரிதாபம்தான் எழுகிறது.ரஜினி 'ஃபார்முலாவில்',ரஜினியே இன்று படம் நடித்தாலும் ஓடாது என்பதுதான் உண்மை.

இந்தப் படம் பார்த்து மூன்று மணி நெரம் 'Waste' பண்ணதும் இல்லாமல்,இந்தப் படத்துக்கு விமர்சனம் வேற எழுதணுமானு யோசிச்சப்ப விஜய் இந்தப் படத்தில் சொன்ன ஒரு வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது, "தெரிஞ்சவங்களுக்கு செய்கின்ற உதவி நம்மளை மட்டும்தான் காப்பாத்தும்;தெரியாதவங்களுக்கு செய்கின்ற உதவியோ நம்ம வம்சத்தையே காப்பாத்தும்".

வேட்டைக்காரன்‍-விஜய்

33 comments:

  1. அண்ணே பாடம் பார்காலாம் என்றிருந்தேன்.
    எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

    ReplyDelete
  2. கடைசி இரண்டு வரிகள் நச்சு..!

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  3. நீங்க‌ளுமா வேட்டைல‌ சிக்கிட்டீங்க‌?

    ReplyDelete
  4. விஜய் இடம் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அவரோட படத்திற்கு அதிகமான விமர்சனங்கள் எழுதப்படுகின்றது என்று நினைக்கின்றேன். மக்கள் முதல்ல எந்தமாதிரி படத்தை எதிர்பார்க்கிறாங்க? ரேனிகுண்டா பேராண்மை வித்தியாசமா வந்திச்சு அதற்கு மக்கள் எவ்ளோ தூரம் ஆதரவு கொடுத்தாங்க? சன் டிவி ஆதவன வெளியிட்டா ஆதவன் தான் சிறந்தபடம்ன்னு மக்கள் மனதில திணிச்சுடுவாங்க மக்களும் ஏத்துப்பாங்க. அடி தடிப் படங்கள் தான் ஆக்சன் கிரோவா நிலைக்க ஒரே வழின்னு நினைக்கிறாங்க. அதயேதான் மக்களும் விரும்புறாங்க. வித்தியாசமன படங்களுக்கு மக்களிடம் ஆதரவு போதியளவு இல்லை.

    ReplyDelete
  5. "தெரிஞ்சவங்களுக்கு செய்கின்ற உதவி நம்மளை மட்டும்தான் காப்பாத்தும்;தெரியாதவங்களுக்கு செய்கின்ற உதவியோ நம்ம வம்சத்தையே காப்பாத்தும்".

    நல்ல வேலை நீங்க எங்களை காப்பாத்தீட்டேங்க

    ReplyDelete
  6. தெரிஞ்சவங்களுக்கு செய்கின்ற உதவி நம்மளை மட்டும்தான் காப்பாத்தும்;தெரியாதவங்களுக்கு செய்கின்ற உதவியோ நம்ம வம்சத்தையே காப்பாத்தும்".

    நல்ல வேலை நீங்க எங்களை காப்பாத்தீட்டேங்க

    ReplyDelete
  7. டைசி இரண்டு வரிகள் நச்சு..!

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  8. சிறுத்தையை வேட்டையாடுவதுதானே வேட்டைக்காரனின் வேலை? ஆனால் சினிமா சிறுத்தையை அதே சினிமா வேட்டைக்காரன் கொன்று விட்டானே... என்று புலம்பல் சத்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.

    அரசல் புரசலாக ஆரம்பித்தாலும் நேரடியாக மேட்டருக்கு வருவோம். 'சிறுத்தை' என்ற படத்தை கார்த்தி, சூர்யா சகோதரர்களின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க முடிவானது. இவர்தான் 'பருத்தி வீரன்' பட தயாரிப்பாளர். இதற்காக 'விக்கிரமார்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தார்களாம் இவர்கள்.

    'வேட்டைக்காரன்' படத்தை மற்றவர்களை போலவே ஆர்வமாக பார்க்க கிளம்பிய சகோதரர்களுக்கு ஆத்திரமான ஆத்திரமாம். வேட்டைக்காரனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் 'விக்கிரமார்குடு' படத்தின் சீன்களை தழுவி அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி படத்திலுள்ள சரக்கையெல்லாம் உருவி விட்டால் மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? இதுதான் சகோதரர்களின் கோபத்திற்கு காரணம்.

    இப்படி 'உருவி' கதை பண்ணிய இயக்குனரை விட்டு விட்டு விஜய்யை குறை சொல்வானேன்? என்று இன்னொரு புறம் சமாதானம் செய்து கொண்டார்களாம் அதே அண்ணன் தம்பிகள். சினிமா கோபம் சில நிமிடங்கள்தானே நீடிக்கும்...

    ReplyDelete
  9. சிறுத்தையை வேட்டையாடுவதுதானே வேட்டைக்காரனின் வேலை? ஆனால் சினிமா சிறுத்தையை அதே சினிமா வேட்டைக்காரன் கொன்று விட்டானே... என்று புலம்பல் சத்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.

    அரசல் புரசலாக ஆரம்பித்தாலும் நேரடியாக மேட்டருக்கு வருவோம். 'சிறுத்தை' என்ற படத்தை கார்த்தி, சூர்யா சகோதரர்களின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க முடிவானது. இவர்தான் 'பருத்தி வீரன்' பட தயாரிப்பாளர். இதற்காக 'விக்கிரமார்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தார்களாம் இவர்கள்.

    'வேட்டைக்காரன்' படத்தை மற்றவர்களை போலவே ஆர்வமாக பார்க்க கிளம்பிய சகோதரர்களுக்கு ஆத்திரமான ஆத்திரமாம். வேட்டைக்காரனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் 'விக்கிரமார்குடு' படத்தின் சீன்களை தழுவி அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி படத்திலுள்ள சரக்கையெல்லாம் உருவி விட்டால் மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? இதுதான் சகோதரர்களின் கோபத்திற்கு காரணம்.

    இப்படி 'உருவி' கதை பண்ணிய இயக்குனரை விட்டு விட்டு விஜய்யை குறை சொல்வானேன்? என்று இன்னொரு புறம் சமாதானம் செய்து கொண்டார்களாம் அதே அண்ணன் தம்பிகள். சினிமா கோபம் சில நிமிடங்கள்தானே நீடிக்கும்...

    ReplyDelete
  10. கடைசி வசனம்.. சூப்பரு..

    ReplyDelete
  11. padam kevalamaga irundadu vijay todarndu ippadi padam nadithal makkal mental agi viduvargal

    ReplyDelete
  12. @ பின்னோக்கி!

    :-(

    ReplyDelete
  13. @ கா.பழனியப்பன்!

    அப்படியே படத்துக்கு மிச்சமான காசுல பாதியை என் அக்கவுன்ட்டுக்கு அனுப்பி வைச்சிடு :‍‍-)

    ReplyDelete
  14. @ உண்மைத் தமிழன்(15270788164745573644)!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  15. @ தமயந்தி!

    விதி பொல்லாதது தமயந்தி

    ReplyDelete
  16. @ Anonymous!

    ரேனிகுண்டா,பேராண்மை எல்லாம் ஓரளவுக்கு 'ஆவரேஜ்'ஆக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள்.சின்ன நடிகர்கள் நடித்திருப்பதினாலேயே 'சூப்பர் ஹிட்' ஆக வேண்டிய படங்கள் 'ஆவரேஜ்'ஆகவும்,பெரிய நடிகர்கள் நடித்திருப்பதினாலேயே 'ஃப்ளாப்' ஆக வேண்டிய படங்கள் 'ஆவரேஜ்'ஆகவும் ஓடுகின்றன. சில நல்ல படங்களும் ஏதோ ஒரு காரணத்தினால் ஓடாமல் இருந்திருப்பதும் உண்மைதான். ஆனால்,கண்டிப்பாக 'ஃப்ளாப்' ஆகக் கூடிய 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் விஜய் நடிப்பதற்குப் பதிலாக 'பேராண்மை' போன்ற படங்களை விஜய் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

    ReplyDelete
  17. @ Payamariyaan !

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  18. @ SENTHILKUMARAN!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  19. @ Anonymous!

    வருகைக்கும்,தகவலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. நச்சுன்னு இருக்கு

    ReplyDelete
  21. @ அன்புடன்-மணிகண்டன்!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  22. @ vins!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  23. @ தண்டோரா!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  24. @ நர்சிம்!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  25. Vijay is a good actor But he needs a Good Director......

    ReplyDelete
  26. "வேட்டைக்காரனை பார்க்கும் பொழுதுதான் அழகிய தமிழ் மகன்,வில்லு படங்களின் அருமை தெரிகிறது."

    Good Review.

    ReplyDelete
  27. @ Reena!

    Thanks for your comment. I partially agree with you :-)

    ReplyDelete
  28. @ இன்பம்!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  29. `வேட்டைக்காரன் பார்க்கும் போது தான் வில்லு,அழகிய தமிழ் மகன் படத்தோட அருமை தெரியுது`...

    சரியான comment..படிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன்..

    -சுரேஷ் பாபு..

    ReplyDelete
  30. @ suresh babu!

    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete