Saturday, September 11, 2010

கொமரம் புலி-திரை விமர்சனம்(தெலுங்கு)


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில்,ஏ.ஆர் ரகுமான் இசையில்,பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்திருக்கும் தெலுங்கு படம் 'கொமரம் புலி'.

இந்தப் படத்தில் கதை முதற்கொண்டு எதுவுமே கிடையாதுங்க. இருந்தாலும்,கதை என்னன்னு தெரிஞ்சுகிட்டே ஆகனும்னு நினைக்கிறவங்க மட்டும் கீழே இருக்கிறதைப் படிங்க.

பவன் கல்யாண் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.மக்கள் பிரச்சனையை தீர்க்கனும்கிறதுக்காக,ஒரு ரூபாய் காயின் பூத்திலிருந்து மக்கள் தன்னை நேரடியாக‌ தொடர்பு கொள்வது போல் ஏற்பாடு செய்கிறார்.அதற்கப்புறம் அவர்களின் பிரச்னையைத் தீர்த்துவிட்டு,படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு புது பிரச்சனையைக் கொடுத்து,தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்.

படம் ஆரம்பத்தவுடனே 1985-ம் ஆண்டு என்று காட்டுகிறார்கள்.அப்போது வரும் காட்சிகளெல்லாம் அந்த ஆண்டில் வெளி வந்த படக் காட்சிகளை விடக் கொடுமையாக இருக்கின்றன.தன் மகனை போலிஸாக்கிப் பார்க்க நினைக்கும் சரண்யா லெஃப்ட்,ரைட் சொல்வதும் அதற்கு ஏற்றாற் போல்,வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை காலை ஆட்டுவதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.பவன் கல்யாணுக்கு படம் நன்றாக வரும் என்று பெரிதாக நம்பிக்கை இருந்திருக்கும் போல,உடம்பையெல்லாம் குறைத்து,ஓவர் ஆக்டிங்கோடு நடித்திருக்கிறார்.ஹீரோயினைப் பார்த்து நாம் பரிதாபப்படுவதா இல்லை படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து அவர் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.

படத்தின் ஹீரோ அடிக்கடி பத்து,பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து வசனம் பேச ஆரம்பித்து விடுகிறார்.அவர் மூச்சு விடாமல் பேசி முடித்தவுடன்,நமக்கு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது போல் இருக்கிறது.அதுவும் வில்லன் மனோஜ் பாஜ்பாய் பொய் சொல்கிறார் என்பதை "நடந்ததை உண்மையிலேயே,யோசித்து சொல்றவங்க மேலே பார்த்து பேசுவாங்க;பொய் சொல்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்து பேசுவார்கள்" என்கிறார் பாருங்கள்.சே! எஸ்.ஜே.சூர்யா மேலே பார்த்துட்டே கதை சொன்னதைப் பார்த்து,பவன் ஏமாந்துட்டார் போல.

ஏற்கெனவே கடுப்போடு படம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு,மனோஜ் பாஜ்பாயின் நடிப்பும்,வசன உச்சரிப்பும்,அதிரடியாக எதிரணி ரன்கள் குவித்துக் கொண்டிருக்கையில்,இஷாந்த் சர்மாவிடம் பாலைக் கொடுத்து பவுலிங் போட சொல்வது போல் உள்ளது.ஷ்ரேயா ஒரு பாடலுக்கு கெஸ்ட் ரோலில் வருகிறார்.

படத்தில் உள்ள ஒரே உருப்படியான விசயம் ரகுமானின் இரண்டு பாடல்களான தோட்சே மற்றும் மாராலன்ட்டே(ஸ்லம்டாக் மில்லியனரில் வந்த Gangstar blues பாடலையே கொஞ்சம் மாற்றி 'தோட்சே' என்று போட்டிருந்தாலும்,ஸ்ரேயே கோஷலின் அழகிய குரலில்,ஸ்ரேயாவின் அழகிய.....இந்தப் பாடல் நம்மைக் கிறங்கடிப்பது உண்மை).

எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார்.நல்ல வேளைக்கு இந்தப் படத்தை இவர் தமிழில் இயக்கவில்லை.படம்தான் நன்றாக வரவில்லையே,படத்தையாவது இரண்டு அல்லது இரண்டே கால் மணி நேரத்தில் முடித்துத் தொலைத்தால் என்ன?.அட தேவுடா,மூன்று மணி நேர அளவிற்கு நம்மைக் கொடுமைப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.

கொமரம் புலி-நிஜப் புலிகிட்ட மாட்டியிருந்தால் கூட,இந்த அளவிற்கு கஷ்டம் இருந்திருக்காது!

7 comments:

 1. உங்கள் விமர்சனம் அருமை.எனக்குப்பிடித்த வரிகள்
  எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார்.நல்ல வேளைக்கு இந்தப் படத்தை இவர் தமிழில் இயக்கவில்லை.படம்தான் நன்றாக வரவில்லையே,படத்தையாவது இரண்டு அல்லது இரண்டே கால் மணி நேரத்தில் முடித்துத் தொலைத்தால் என்ன?.அட தேவுடா,மூன்று மணி நேர அளவிற்கு நம்மைக் கொடுமைப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.


  தமிழில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் இதே படம் புலி என வரப்போகுது ,கபர்தார்

  ReplyDelete
 2. komaram Puliya Seekiram Marathil Kattipodunga.

  ReplyDelete
 3. Nalla velai actor vijay escape.. avar taan intha padathai tamilil pannuvathaga irunthathu...

  ReplyDelete
 4. @ ஜெட்லி!

  வருகைக்கு நன்றி ஜெட்லி!

  ReplyDelete
 5. @ சி.பி.செந்தில்குமார்!

  வருகைக்கு நன்றிங்க! எனக்குத் தெரிந்து இந்தப் படம் தமிழில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு!

  ReplyDelete
 6. @ Anonymous!

  மரத்தில் கட்டிப் போடுவதற்கு முன்னாடியே 'புலி' தியேட்டரை விட்டுப் பறந்து போயிடும்னு நினைக்கிறேன்!

  விஜய் செய்த உருப்படியான சில விசயங்களில் இதுவும் ஒன்று!

  ReplyDelete