
இந்தியாவிலேயே முதன் முறையாக 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்படும் 'எந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் என்னும் பெயரை தன்னுடைய சன் பிக்சர்ஸின் மூலமாக, சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் இப்போது பெறுகிறார்.
இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினிகாந்த்,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ஷங்கரின் இயக்கத்தில்,ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில்,இந்தியாவின் மிகப் பெரிய டெக்னீஷியன்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட எந்திரன் திரைப்படம் இந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகின்றது.
கலைஞர் குடும்பத்தினருடன் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக,கலாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸை ஆரம்பித்தார். இதுவரை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்தே படங்களை விலைக்கு வாங்கி, சன் பிக்சர்ஸ் தன்னுடைய பெயரில் வெளியிட்டு வந்திருக்கின்றது. காதலில் விழுந்தேன் படத்தில் ஆரம்பித்து தெனாவெட்டு,தீ,படிக்காதவன்,மாசிலாமணி என்று மொக்கைப் படங்களை மட்டுமே இப்போது வரை வெளியிட்டும் வந்து உள்ளது.தங்களிடம் உள்ள சேட்டிலைட் டிவிக்களின் உதவி கொண்டு எவ்வளவு மோசமான படத்தையும் வெற்றி பெறச் செய்து விடலாம் என்ற நினைப்பை, சன் பிக்சர்ஸிடம் இருந்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் பொய்யாக்கியிருக்கின்றன.அதேபோல் சன்டிவி மேல் இருக்கும் நம்பிக்கையும் 'தில்லாலங்கடி' போன்ற படங்களை 'இப்போது வரை' நம்பர் 1(?) இடத்தில் வைத்திருப்பதால் அதன் மேல் உள்ள நம்பிக்கையும் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றது.நாளையே இவர்கள் ஒரு நல்ல படம் எடுத்து,அந்தப் படத்திற்கு நம்பர் 1 இடம் கொடுத்தால் கூட மக்களுக்கு அந்தப்படம் மேல் நம்பிக்கை வருமாவென்று தெரியவில்லை.
சினிமாவில் உள்ள மற்ற எந்த தயாரிப்பாளருக்கும் இல்லாத வசதியாக சன் பிக்சர்ஸிற்கு,சன் குரூப் டிவி சேனல்கள்,தினகரன் பத்திரிக்கை,குங்குமம் வார இதழ் என்று விளம்பரப்படுத்துவதற்கு அவர்களுடைய பல ஊடகங்கள் துணை நிற்கின்றன.இவ்வளவு தூரம் பணம்,ஊடகங்கள் என்று வசதிகள் பல இருந்தாலும் சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்திருக்கும் படங்கள் எதுவும் நம்பிக்கை அளிப்பது போல் இல்லை என்பதுதான் உண்மை. மொசர் பியர் நிறுவனத்தினடிமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது குறைந்த பட்சம் ஷங்கரின் 'S' பிக்சரிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் போல், ஒரு படம் கூட சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்ததில்லை.கலைஞர் குடும்பத்திலிருந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாநிதி அழகிரி,உதயநிதி ஸ்டாலின் கூட நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் பெரும்பாலான நல்ல படங்கள் மக்களிடம் சரியாக விளம்பரப்படுத்தப்படாததினாலேயே ஃபிளாப் ஆகியிருக்கின்றன. ஒருவேளை சன் பிக்சர்ஸ் மட்டும் நல்ல படங்களை எடுக்க ஆரம்பித்தால்,அவர்களால் அவர்களுடைய ஊடகங்களின் துணைகொண்டு மக்களிடம் அத்தகைய நல்ல படங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். ஒரு நல்ல மாற்றத்தை தமிழ் சினிமாவிற்குள்ளும் கொண்டு வர முடியும். இனிமேலாவது இவர்கள் நல்ல படங்களைக் கொடுப்பார்களா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
இந்தியாவிலேயே பெரிய சினிமா இன்டஸ்ட்ரி என்றால் இந்தி,அதற்கப்புறம் தெலுங்கு,மூன்றாவதகத்தான் தமிழ். இருந்தாலும், இந்தியாவிலேயே அதிகமான பொருட் செலவில் எந்திரனைத் தமிழில் தயாரிப்பதற்கான காரணம் ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட்தான்.தென்னிந்தியாவிலேயே அதிகமான பொருட்செலவில் தமிழ் நடிகர்களைக் கொண்டு மட்டுமே இப்போதைய கால கட்டத்தில் படம் எடுக்க முடியும்.ரஜினியும்,கமலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் மட்டுமல்ல. இவர்களுக்கு தென்னிந்தியா முழுமைக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. ஆரம்ப காலக் கட்டங்களில் அனைத்து மொழிகளிலும் படங்கள் பண்ணியதால் கமலுக்கும், கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் டப்பிங் படங்கள் ஆந்திராவில் சக்கைப் போடு போடுவதால் ரஜினிக்கும்,இவர்களை நம்பிப் பெரிதாக முதலீடு போட்டால் தயாரிப்பாளர்களுக்கு கொழுத்த இலாபம்.ரஜினி படம் வெளிவருகையில்,ஆந்திராவின் முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய படங்களைத் தள்ளிப் போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் சிரஞ்சிவிக்கோ, நாகர்ஜீனாவிற்கோ,மகேஷ் பாபு போன்றவர்களுக்கோ தமிழில் பெரிதாக மார்க்கெட் இருப்பதில்லை. அவர்களின் படங்கள் சென்னையின் சில தியேட்டர்கள் மற்றும் ஒசூரில் வெளியாவதோடு சரி. ஆனால் ரஜினி,கமலின் படங்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இன்றும் மிகப் பெரிய ஓப்பனிங்கைக் கொண்டிருக்கின்றன.இவர்களைப் பின்பற்றித்தான் விக்ரமும்,சூர்யாவும் தெலுங்கிலும் கால் பதித்து,இன்று இந்தியிலும் தங்களுடைய வேர்களைப் பரவவிட ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமானால் விஜய்,அஜித்தை விட விக்ரம்,சூர்யாவிற்குத்தான் மொத்தமாக மார்க்கெட் வேல்யூ அதிகம். அதனால்தான் என்னவோ இப்போது அஜித் மங்காத்தா தெலுங்கு பதிப்பிலும்,விஜய் 3 இடியட்ஸ் தெலுங்கு பதிப்பிலும் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்திரன் போன்ற படங்கள் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவிற்குத்தான் மிகவும் நல்லது.இதற்கப்புறம் கமலின் கனவு படங்களான மர்ம யோகி,மருத நாயகம் போன்ற படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.நாளைக்கே சன் பிக்சர்ஸ் இதே போன்ற பெரிய பட்ஜெட் படங்களை விக்ரம்,சூர்யாவைக் கொண்டும் எடுக்க ஆரம்பிக்கலாம்.தமிழ் சினிமா எப்படி தெலுங்கு படவுலகில் இப்போது பலமாக காலடி பதித்து நிற்கின்றதோ, அதேபோல் இந்திப் படவுலகிலும் இதுபோன்ற படங்களின் மூலமாக மட்டுமே காலூன்ற முடியும். ரோஜா,பம்பாய் போன்ற படங்களுக்கு அப்புறம் தமிழின் நேரடிப் படங்கள் எதுவும் இந்தியில் பெரிதாக வெற்றி பெற்றதில்லை. எந்திரன் தமிழில் மட்டுமல்லாது,இந்தியிலும் பெரிதாக வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் தமிழ் சினிமா,தென் இந்தியா மட்டுமல்லாது வட இந்தியாவிலும் காலூன்ற வேண்டுமென்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்க முடியும். அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும், சன் பிக்சர்ஸ் இப்போதைய கால கட்டத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சன் பிக்சர்ஸ் தமிழில் கதை அம்சமுள்ள படங்களையும்,நல்ல மசாலாப் படங்களையும் இதற்கப்புறமாவது கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாழ்த்துகள்.
http://bit.ly/ai8Y0a
ReplyDeleteEnthiran Preview Show Result!
Excellent Songs Visualisation!
super keep rock...
ReplyDelete@ Narayan!
ReplyDeleteThanks for your information!
@ புதிய மனிதா!
ReplyDeleteThank you so much!