1) என்னிடம்
யார் என்ன வாங்கி சென்றாலும்
என் குறிப்பு புத்தகத்தில்
எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்
நீ வந்து
குறிப்பு புத்தகத்தை வாங்கி சென்றாய்!
2) நான் எதையாவது
மறந்து விட்டுச் செல்லும் போதெல்லாம்
நீதான் தவறாமல் வந்து
ஞாபகப்படுத்தி விட்டு செல்வாய்
உன்னை மறக்க நினைக்கும்
இக்கணம் உட்பட!
3) மெழுகுவர்த்தியாய்
என்னுள் இறங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை எரித்துக் கொண்டிருக்கிறாய்
இப்போதும் உன்
கண்ணீருக்காய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான்!
4) உன்னை மறக்க நினைத்து
ஒவ்வொரு முறை
என்னை எரித்துக் கொள்ளும்போதும்
சாம்பலிலிருந்து
உன் ஞாபகங்கள்
ஃபீனிக்ஸ் பறவையாய் கிளர்ந்தெழுகின்றன!
கவிதை மிக அழகு
ReplyDeleteமனோ
வருகைக்கு மிக்க நன்றி மனோ!
ReplyDeleteஎன்னிடம்
ReplyDeleteயார் என்ன வாங்கி சென்றாலும்
என் குறிப்பு புத்தகத்தில்
எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்
நீ வந்து
குறிப்பு புத்தகத்தை வாங்கி சென்றாய்!
அருமை!!
கவிதைகள் யாவும நன்றாகவுள்ளன!!
@ முனைவர்.இரா.குணசீலன்!
ReplyDeleteகருத்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றிங்க!
முதல் இரண்டு கவிதையும் அட்டகாசமாக இருக்கிறது மோகன்..மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது... வாழ்த்துக்கள், தொடருங்கள்...
ReplyDeleteநாலு கவிதைகளுமே அருமை அதுவும் முதல் கவிதை super
ReplyDelete@ கமலேஷ்!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
@ VELU.G!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!