Monday, March 22, 2010

முன் தினம் பார்த்தேனே‍‍-திரை விம‌ர்ச‌ன‌ம்

நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரியான பெண்,இந்த உலகத்தில் 'ஒருவர்' மட்டுமே கிடையாது.ஒரே மாதிரி உருவ அமைப்பிலேயே ஏழு பேர் இருக்கும் போது,நம் மனதுக்கு/எண்ணத்துக்கு ஏற்ற மாதிரி அதிகமான பெண்கள் இவ்வுலகத்தில் இருப்பார்கள்.ஒருவர் நம்மை விட்டு விலகிச் சென்றாலும்,மற்றொருவர் நாம் நினைத்தபடியே நமக்கு கிடைப்பார் என்பதை சொல்லும் படம்தான் 'முன் தினம் பார்த்தேனே'.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு காதலிப்பதைத் தவிர வேறு 'வேலை' எதுவும் இல்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே,கதாநாயகனை Software Company-ல் Project Manager ஆக காட்டியிருக்கும் டைரக்டரின் சமயோசிதத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.அவர் Software Company போல் காட்டியிருக்கும் இடத்தையும்,ஆட்களின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது,மதுரைப் பக்கத்தில் வாழும் கதாநாயகன் சென்னை பாஷை பேசுவது போல் உள்ளது.

படத்தை ஒரளவிற்கு பார்க்க வைப்பது தமனின் இசையும்,சாய் பிரசாந்த்தின் காமெடியும் மட்டும்தான்.சாய் பிரசாந்த்திற்கு நிச்சயம் செய்த பெண் லெட்டர் எழுதி வைத்து விட்டு,வீட்டை விட்டு ஓடியவுடன்,ஹுரோ சஞ்சய்,லெட்டர் மட்டும் எழுதி வைச்சிருந்திருக்கலாமே என்று சாய் பிரசாந்த்திடம் கேட்பது கலக்கல்.நான் காய்ஞ்சு போயிருந்தாலும் என்னோட Taste அவ்வளவு Worst கிடையாது என்று ஹுரோ சஞ்சயின் நண்பனாக வருபவர் ஆஃபிஸ் தோழியிடம் கலாய்ப்பது,சாய் பிரசாந்த்தை அவர் தங்கை கலாய்ப்பது,டான்ஸ் கிளாஸ் காட்சிகள்,பிரியா உனக்கான ஒருத்தனோ/ஒருத்தியோ கண்டிப்பாகக் கிடைச்சிடுவாங்க‌ என்று படத்தின் பல இடங்களில் சின்ன சின்ன நகைச்சுவைக் காட்சிகளால் தோரணம் கட்டியிருக்கிறார்கள்.பொண்ணுங்க எல்லாம் நம்முடைய‌‌‌‌ கழுத்தை நம்மளவே அறுக்க வச்சு,அது நம்ம உடம்புக்கு நல்லதுன்னு நம்மளவே நம்பவும் வைச்சுடுவாங்க என்று படத்தின் வசனகர்த்தாவும் கிடைக்கும் இடங்களில் புகுந்து விளையாடுகிறார்‍‍.ஏற்கெனவே காதலில் தோல்வியுற்ற கதாநாயகன்,தான் விரும்பும் பெண்ணிற்கும் பழைய காதல் ஒன்று உள்ளது என்று தெரிய வந்தவுடன்,அவளை விட்டு விலகி வருவதும் பின்பு அவளையே நினைத்து உருகுவதும் யதார்த்தம்.

தன்னோட அடுத்த‌ படத்துக்காக T.ராஜேந்தர் தேர்வு செய்து வைத்திருந்த ஹீரொயின்ஸை எல்லாம்,படத்தின் டைரக்டர் மகிழ் திருமேனி இந்தப் படத்துக்காகக் கடத்தி கொண்டு வந்துவிட்டார் போல.அத‌னாலேயே,இந்தப் படம் பார்க்கும் போது,ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பதைப் போன்று உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் தான் நேசிப்பதைத் தானே கொன்று விடுகிறான் என்று படத்தில் டைரக்டர் சொல்கிறார்-அவரும் கூட இந்தப் படத்தை ரொம்பவும் நேசித்துவிட்டார் போல்.

முன் தினம் பார்த்தேனே‍‍-படமும் ஏற்கெனவே பார்த்த மாதிரியே இருக்கிறது!

6 comments:

  1. நல்ல அலசல் நண்பரே.....
    உன்னாலே உன்னாலே தான் அந்த பார்த்த படம்....

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெட்லி!சொல்ல சொல்ல இனிக்கும் படம் கூட இதே மாதிரி கதைதான்.

    ReplyDelete
  3. boss,

    thanks for your comments,
    i revised that...

    your review is good.

    ReplyDelete
  4. ஒவ்வொரு மனிதனும் தான் நேசிப்பதைத் தானே கொன்று விடுகிறான் என்று படத்தில் டைரக்டர் சொல்கிறார்-அவரும் கூட இந்தப் படத்தை ரொம்பவும் நேசித்துவிட்டார் போல். //

    உங்க இந்த அப்ரோச் பிடிச்சிருக்கு. ஹிஹிஹி...

    ReplyDelete
  5. @ விக்னேஷ்வரி!

    வருகைக்கு மிக்க நன்றிங்க!

    ReplyDelete