Monday, March 1, 2010
விண்ணைத் தாண்டி வருவாயா-திரை விமர்சனம்
கவுதம் மேனன் இயக்கத்தில்,ரகுமான் இசையமைப்பில்,சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா.
மெக்கானிக்கல் இஞ்சியனரிங் முடித்த சிம்புவிற்கு, சினிமா டைரக்டராவதுதான் கனவு.தன்னுடைய வீட்டிற்கு மேல் வீட்டில் குடியிருக்கும், தன்னை விட ஒரு வயது மூத்த,Software Engineer ஆக வேலை பார்க்கும் த்ரிஷாவைக் காதலிக்கிறார்.சிம்புவின் காதலைத் த்ரிஷா ஏற்றுக் கொண்டு,சிம்புவிற்காகத் தன் வீட்டைத் தாண்டி வருகிறாரா என்பதுதான் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் கதை.
தமிழில் முழுமையான ஒரு நல்ல காதல் படம் வந்து பல நாட்களாகி விட்டதால்,படத்தின் முதல் பாதி முழுவதும் இளமைக் கொண்டாட்டமாகச் செல்கிறது.சிம்புவும் சரி,த்ரிஷாவும் சரி,இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு அழகாக இருந்ததுமில்லை;நடித்ததுமில்லை.AR ரகுமானின் குரல்,சிம்புவிற்குப் பொருந்துவது போல்,இந்த அளவு அழகாக யாருக்கும் பொருந்தியதாகத் தெரியவில்லை.உலகத்தில் எத்தனையோ பொண்ணு இருந்தாலும்,அவள் மேல் ஏன் காதல் ஏற்பட்டது என்று சிம்பு,சிம்புவின் நண்பராக வரும் கேமராமென்,த்ரிஷா போன்றோர் காட்சிக்கு ஏற்ற மாதிரி கேட்டுக்கொள்வது நன்றாக இருக்கிறது.அதேபோல்,இதற்கு முன் யாரும் உன்னைக் காதலித்ததில்லையா என்று சிம்பு த்ரிஷாவிடம் கேட்கும் போது,அதற்கு அவர் 'உன் கண் வழியா அவங்க யாரும் என்னைப் பார்க்கலை போல்' என்று சொல்வது அருமை.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல்,படத்தில் ரகுமானின் இசை,காமிரா,நடிப்பு என்று எவ்வளவோ விசயங்கள் நன்றாக இருந்தாலும், படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரைக் காதல்,காதல் என்று காதலையே காட்டிக் கொண்டிருப்பது அசுவாரசியமாக இருக்கிறது.ஹீரோயின்,ஹீரோவைப் பிரிந்து செல்வதற்கான காரணம் கடைசி வரை ஹீரோவிற்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம்.அதற்காகப் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு கூடவா தெரியாமல் இருப்பது.அப்படியே,த்ரிஷா தன்னுடைய குடும்பத்திற்காகத்தான் 'திடீரென்று' அந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பது,கவுதம் மேனன் காலேஜில் படித்துக் கொண்டிருந்த காலத்திற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.
எந்தக் குத்துப்பாட்டும் இல்லாமல்,டபுள் மீனிங் இல்லாமல்,ஒரு முழுமையான காதல் படத்தைக் குடுக்க 'நினைத்ததற்காக' கவுதம் மேனனைப் பாராட்டலாம்.நாமெல்லாம் தகவலைப் பரிமாற்றிக் கொள்வதற்கு Email,SMS போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம்,கவுதம் மேனன்,தன்னுடைய படங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.இந்தப் படத்தை வெள்ளிக்கிழமையே பார்த்து விட்டேன்.அன்றே,படத்தின் விமர்சனத்தையும் போட்டுவிடலாம் என்று நினைத்தபோது,இந்தப் படத்தில் டைரக்டர்,உண்மையான விமர்சனமெல்லாம் இப்போது திங்கள் கிழமைதான் வெளிவருகிறது என்று கூறியதால்,இன்று விமர்சனத்தைப் போடவேண்டியதாயிற்று.
விண்ணைத் தாண்டி வருவாயா-காதலைப் போலவே படமும்,ஆரம்பத்தில் Interesting;கடைசியில் Torture.
Subscribe to:
Post Comments (Atom)
SAME FEELING....BUT IT'S GOOD LOVE STORY
ReplyDeletePLS READ MY RE-VIEW ALSO
poda loosu
ReplyDeleteThanks for your comments Mano!
ReplyDelete//த்ரிஷா தன்னுடைய குடும்பத்திற்காகத்தான் 'திடீரென்று' அந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பது,கவுதம் மேனன் காலேஜில் படித்துக் கொண்டிருந்த காலத்திற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.
ReplyDelete//
Very true. . .
He could have molded this part
This is the only part in the movie .. that does not fit.
@ thiru!
ReplyDeleteThanks for your comment Thiru.If Gowtham had shown any valid reason as to why trisha took that decision,the film would have been much better.
நல்ல விமர்சனம்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
@ நினைவுகளுடன் -நிகே!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
//தமிழில் முழுமையான ஒரு நல்ல காதல் படம் வந்து பல நாட்களாகி விட்டதால்,//.....உண்மைதான்!
ReplyDelete//இந்தப் படத்தில் டைரக்டர்,உண்மையான விமர்சனமெல்லாம் இப்போது திங்கள் கிழமைதான் வெளிவருகிறது என்று கூறியதால்,இன்று விமர்சனத்தைப் போடவேண்டியதாயிற்று.//....ஹாஹாஹா:-)
@ Priya!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி பிரியா!
எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.. ரொம்ப நாளைக்கு அப்புறம் முழுமையா காதலை மட்டுமே கொண்ட ஒரு படம்.. இருந்தாலும் "அலைபாயுதே" வுல இருந்த ஒரு ஃபீல் இந்த படத்துல வரலை. மணிரத்னம் மணி"ரத்னம்"தான். இருந்தாலும் இந்த படத்தை குறை சொல்ல முடியலை..
ReplyDeleteEntha Padam madiri.. Mokka padam.. 20 varushathula vanthathe ella..
ReplyDeleteLoosunga madiri.. ""Naan yen Jessie ya pakanum.? Love pannanum?"" Naan unna love panren. unnaku 80 vayasu agum pothu yenaku 79 ahum nu..lossu madiri pesikuthunga..
Ore aaruthal.. SONGS PICTURIZATION.