எல்லா நதிகளும்
ரோமை நோக்கி செல்வது போல்
என் எல்லாப் பாதைகளும்
உன்னை நோக்கியே இருக்கின்றன!
உனக்குப் பையன் வேண்டுமா
இல்லை பெண் வேண்டுமா? என்றாய்
நீதான் வேண்டுமென்றதில்
குரோமோஸோம்களெல்லாம்
கும்மி அடிக்கத் தொடங்கின!
கன்னத்தில்
கை வைக்காதே!
நினைப்பது நடக்காதென்றாய்
உன் கன்னத்தில் கை வைத்தேன்
நினைக்காததெல்லாம் நடந்தது!
முத்தம் கேட்கையில்
பணிவாய் கேள்
அதிகாரமாய் கேட்காதே என்கிறாய்
காமத்துப் பாலும்
ஒரு அதிகாரம்தானே என்கிறேன் நான்!
உன்னுடம்பின் மச்சங்களை
எத்தனை முறை
எண்ணிச் சொன்னாலும்
எண்ணிக்கையில் ஒன்று
குறைகிறது என்கிறாய்!
அதிகார முத்தம் இனிமை
ReplyDeleteநன்றி பழனி:-))
ReplyDelete