Wednesday, October 20, 2010

பிருந்தாவனம்-திரை விமர்சனம்(தெலுங்கு)

கார்த்திக்,கௌசல்யா நடிப்பில்,செல்வா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வந்த 'பூவேலி' படத்தை, அதிகமான மசாலா தூவி இயக்குனர் வம்சி தெலுங்கில் கொடுத்திருக்கும் படம்தான் 'பிருந்தாவனம்'.

சமந்தாவைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு,ஒரு சந்தர்ப்பத்தில் காஜலின் காதலனாக நடிக்க நேரிடுகிறது.ஆரம்பத்தில் ஜூனியர் என்.டி.ஆரை வெறுக்கும் காஜல் குடும்பத்தினர் படிப்படியாக ஜூனியர் என்.டி.ஆர் மேல் அன்பு பாராட்ட ஆரம்பிக்கின்றனர்.ஜூனியர் என்.டி.ஆருக்கு காஜல் மேல் காதல் வரும் நேரத்தில்,சமந்தாவும் காஜலின் குடும்பத்திற்குள் நுழைகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பிருந்தாவனம் படத்தின் கதை.

கார்த்திக் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நினைத்துப் பார்ப்பதற்கே கொடுமையாக இருந்தாலும்,சில காட்சிகளில் அவருடைய துள்ளலான நடிப்பும்,டான்ஸும் நன்றாக இருக்கின்றன.படத்தில் கஜோலின் வீடாகக் காட்டப்படும் செட்டிங்ஸும் அந்த கிராமமும் அவ்வளவு அழகாக இருக்கின்றன.இடைவேளைக்குப் பிறகு பிரமானந்தமும்,வேணுவும் அடிக்கும் காமெடிகள் அதகளம்.படத்தில் வரும் 'சில' சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அழகான பெண்ணின் இரு கன்னங்களில் எந்த கன்னத்தில் முத்தமிடுவது என்று நாம் தடுமாறுவது போல்,காஜலும்,சமந்தாவும் வரும் காட்சிகளில் யாரைப் பார்த்துக் கொண்டிருப்பது என்று தெரியவில்லை.இவர்கள் இருவரும் வரும் காட்சிகளிலெல்லாம் காமராமேனுக்கு லைட்டிங் வைத்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.சமந்தாவை விட காஜலுக்குத்தான் ஸ்கோப் அதிகம்.அவருடைய சோகமான முகமும் அவருடைய வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவுஅட்டகாசம்.தமனின் இசையும் பரவாயில்லை ரகம்.

அழகான காதல் கதையை அதிகமான மசாலா தூவி இந்த அளவிற்கு சிதைத்திருக்க வேண்டாம்.பூவேலியில் ஹீரா,கார்த்திக்கை ஆரம்பத்தில் காதலிக்காமல் இருப்பதால்,கார்த்திக்கிற்கு கௌசல்யா மேல் காதல் வருவது இயல்பாக இருந்தது. சமந்தாவும் ஜூனியர் என்.டி.ஆரும் ஏற்கெனவே காதலித்துக் கொண்டிருக்கையில்,ஜூனியர் என்.டி.ஆருக்கு காரணமேயில்லாமல் காஜல் மேலும் காதல் வருவது கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாது என்று அவர் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தது போல்தான் தெரிகிறது.

பிருந்தாவனம்-'கொஞ்சம்' ரணம்.

2 comments:

  1. பாடல்களில் என்.டி.ஆர் காட்டி இருக்கும் வேகம் ரொம்ப ஆச்சர்யமானது. ஆனா சண்டைகள்.. முடியலை......... இந்த மாதிரி ஒரு க்ளைமேக்ஸ் தெலுங்கு சினிமாவுலதான் சாத்தியம். நான் நினைச்ச பூவேலி திரைப்படத்தை நீங்களும் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான விமர்சனம்

    ReplyDelete
  2. @ கவிதை காதலன்!

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete