Sunday, August 8, 2010

பாணா காத்தாடி-திரை விமர்சனம்


அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், புதுமுகங்கள் அதர்வா,சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் பட்ம் 'பாணா காத்தாடி'.

வட சென்னையில் வசிக்கும் அதர்வாவுக்கும், ஃபேசன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாவிற்கும் நடுவில் காதல் அரும்புகிறது.இவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவே, அதர்வா ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடுகிறது.இதிலிருந்து அதர்வா எப்படி 'விடுபடுகிறார்(?)' என்பதுதான் 'பாணா காத்தாடி' படத்தின் கதை.

அதர்வாவும்,சமந்தாவும் அவர்களின் அறிமுகப் படங்கள் என்ற நினைப்பே நமக்கு தோன்றாத‌வாறு நன்றாக நடித்திருக்கிறார்கள். பாடகி-‍நடிகை வசுந்தரா தாஸ் மற்றும் காமிலினி முகர்ஜி இருவரையும் ஒன்றாக வைத்து குழைத்தது போல் அழகாக இருக்கிறார் சமந்தா.இதே போன்று நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது.பிரசான்னா தாதாவாக ஆர்ப்பாட்டமான அமைதியான நடிப்பில் வந்து மனதைக் கொள்ளை கொள்கிறார்.

அதர்வாவுடன் சண்டையிட்டபின் அவரை சமாதானப்படுத்துவதற்காக அவரை தியேட்டருக்கு வரவழைத்து,சமந்தா காட்டும் 'குறும் படம்' நன்றாக இருக்கிறது.படத்தில் நம்மை பெரிதும் கவர்பவர் படத்தின் வசனகர்த்தா. 'சில சமயம்,நமக்கு தேவைப்படுறது நமக்கு கிடைக்காது;ஆனால் நமக்கு கிடைச்சது நமக்கு தேவைப்பட்டதை விட நல்லாவே இருக்கும்' என்பதாகட்டும், மௌனிகா அதர்வாவிடம் சொல்லும் 'என்னமோ அண்ணா சிலை மாதிரி எப்பவும் கையில புக்கை வைச்சிருக்க' மற்றும் 'கிட்ட வா நாயேன்னா, மூஞ்சியை நக்குற' என்று கிடைத்த‌ இடங்களிலெல்லாம் சிக்ஸ்ர் அடித்திருக்கிறார். ஜெயிலிலிருந்து வரும் அதர்வாவிடம்,மௌனிகா சொல்லும் 'என்னைப் பெத்தவங்களும் சரி,என்னைக் கட்டினவரும் சரி, என் பையன் அளவுக்கு என்னை சந்தோஷப்ப்டுத்தினதில்லை' என்பது உருக்கம்.

வட சென்னையைக் களமாகக் கொண்டு வரும் படங்களுக்கெல்லாம் மொத்த குத்தகை எடுத்தது போல் இந்தப் படத்திலும் காமெடி கருணாஸ்.அவரின் காமெடியும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் வரும் எல்லா பாடல்களும்(கடைசி குத்துப்பாட்டு தவிர்த்து),படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கின்றன.அதர்வாவை ஒரு தலையாகக் காதலிக்கும் அந்த ஸ்கூல் பெண் கேரக்டர் நன்றாக இருக்கிறது.

பல முடிச்சுகளைப் போட்டு விட்டு அதனூடே அழகாக பயணிக்கவும் செய்து விட்டு, அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் 'அபிமன்யு' மாதிரி இரண்டாம் பாதியில் இயக்குனர் மாட்டிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. பரபரவென நகர வேண்டிய இரண்டாம் பாதி காட்சிகள் சமந்தா அதர்வாவிடம் மன்னிப்பு கேட்பதும்,அவர் அதை நிராகரிப்பதுமாக நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குனர் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்திருந்தால் 'பாணா காத்தாடி' இன்னும் கொஞ்சம் உயரப் பறந்திருக்கும்.

8 comments:

  1. பாணான்னா என்னெவென்று படத்தில் சொல்லியிருக்கிறார்களா ?.

    பட விமர்சனம் நன்றாக இருக்கிறது. இரண்டாம்பாதி அபிமன்யு :).

    சமந்தா ஏற்கனவே வி.தா.வ நடிச்சுடுச்சுல்ல ?.

    ReplyDelete
  2. Paana kaathadi enral periya kaathadi amputtuthan!

    ReplyDelete
  3. @ பின்னோக்கி!

    கருத்துக்கு நன்றிங்க!

    ச‌மந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடிச்சிருந்தாங்க. இருந்தாலும் இந்தப் படம் அந்தப் படத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டாங்க.சமந்தாவினுடைய முதல் படம் 'மாஸ்கோவின் காவேரி'. ஆனால் அது இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது.

    ReplyDelete
  4. @ வவ்வால்!

    நன்றி வவ்வால்.நீங்கள் கூறியபிறகுதான் 'பாணா காத்தாடி' என்றால் பெரிய காத்தாடி என்பது புரிந்தது!

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. மோகன் சார்,

    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு INVITE செய்திருக்கிறேன்.

    நேரம் இருப்பின் எழுதுங்கள்.

    மனோ

    ReplyDelete
  7. @ கமலேஷ்!

    வருகைக்கு நன்றி கமலேஷ்!

    ReplyDelete
  8. @ MANO!

    அழைப்பிற்கு மிக்க நன்றி மனோ.

    ReplyDelete