Friday, August 21, 2009

பிரிய‌ச‌கி-1


கோபப்ப‌டுகையில்
அழகாய் இருக்கிறாய் என்றதற்கு
கோபப்பட்டாய்!

எங்கே பார்த்து விடுவேனோ என்று
நீ சேலைத் தலைப்பை
சரி செய்யும் போதெல்லாம்
பார்க்காத குற்றவுணர்ச்சியில் நான்!

உன் இதழ் ரேகைகளைப்
பிரதியெடுக்க‌த் தொட‌ங்கிய‌தில்
என் ஆயுள் ரேகை அதிகமாகிவிட்டது!

நான் குளித்துவிட்டு வருகையில்
எனக்கான துண்டு
உன் அழகிய நீண்ட கூந்தல்தான்!

என் த‌லைமுதல் பாதம் வ‌ரை
ஒவ்வொரு நர‌ம்பாய் இழுத்து
அழகிய‌ கோல‌மிட்ட‌வ‌ள் நீ!

தலை சாய்த்து
உதடு சுழித்து
புருவம் உயர்த்தி
நான் ஏன்
உன் இரு கைகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாய்
மார்புக்கு குறுக்கே
கைகளைக் கட்டிக்கொண்டு!.

6 comments:

  1. Thalaivare, kavithai soooooooperrrr... especially the final one....... We are expecting more and more from you........

    ReplyDelete
  2. மோகன் அண்ணா : நீங்கள் முதன் முதலில் சந்தோஷமான கவிதை எழுதியதற்க்கு நன்றி.என்க்கும் உங்களை போல கவிதை எழுத ஆசை. நான் உங்கள் முதல் விசிறி.

    ReplyDelete
  3. @Mano : உனக்கு 'அந்த' வரிகள் மட்டும் ரொம்ப பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.

    ReplyDelete
  4. @Palani: நீ ஏற்கென‌வே ரொம்ப‌ ந‌ல்லா எழுத‌ ஆர‌ம்பிச்சிட்ட‌ மாதிரிதான் என‌க்கு தோணுது.என‌க்கும் கூட‌ உன்னை மாதிரியே 'புனைவு' எழுத‌ணும்னு ஆசை :)

    ReplyDelete
  5. அழகான, இளமையான கவிதை.

    ReplyDelete
  6. @பின்னோக்கி: மிக்க நன்றி பின்னோக்கி அவர்களே.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete