Thursday, June 16, 2011

ஆரண்யகாண்டம்-திரை விமர்சனம்



ஒரு கேங்க் லீடரின்(ஜாக்கி ஷெராஃப்) கீழே வேலை பார்க்கும் அடியாள் சம்பத்திற்கு ஜாக்கி ஷெராஃப் போல் லீடராக ஆசை. அதே நேரத்தில் ஜாக்கி ஷெராஃபிடம் மாட்டிக் கொள்ளும் பெண்ணிற்கு அவருடைய பணத்தின் மேல் ஆசை.தாங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்காக ஒரு ஆணும்,பெண்ணும் எவ்வாறு புத்திசாலித்தனத்துடன் வெவ்வேறு விதமாகக் காய்களை நகர்த்துகின்றனர் என்பதுதான் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 'ஆரண்யகாண்டம்' படத்தின் கதை.

படத்தில் கிளைக்கதைகளாக வரும் ரவிகிருஷ்ணா,வாழ்ந்து கெட்ட ஜமிந்தார் மற்றும் அவருடைய சிறு பையன்,எதிர் குரூப் லீடர் கஜேந்திரன் என்று படத்தின் அனைத்து பாத்திரங்களுமே படத்தின் திரைக்கதைக்கு உதவியாக இருக்கின்றன. தமிழில் கேங்க்ஸ்டர்ஸின் வாழ்க்கையைப் பிரதானமாகக் கொண்டு,பாடல்களே இல்லாமல் வெளிவந்திருக்கும் முதல் படம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னுடைய லீடரான ஜாக்கி ஷெராஃப்பே தன்னைக் கொல்வதற்காகத் தன் மனைவியைக் கடத்தி சென்று விட்ட பிறகு, எதிர் குரூப் ஆட்கள் தன்னைக் கொல்ல வருகையில்,ஓடிக் கொண்டே சம்பத்,ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்ந்து கொண்டே அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டியது எது எனத் திட்டமிடும் இடம் அசத்தல்.படத்தின் முன் பாதியில் வரும் சில காட்சிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால்,மொத்தப் படமுமே மிக நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பழைய பாடல்களையும்,படங்களின் வசனங்களையும்(டிவியில்) காட்சிக்கு ஏற்றவாறு தேர்வு செய்திருப்பது நன்றாக இருக்கிறது.உதாரணத்திற்கு ரவி கிருஷ்ணா ஹீரோயின் யாஸ்மின் பொன்னப்பாவுடன் படுக்கையில் இருக்கையில் டி.வி யில் '16 வயதினிலே' சப்பாணி கமல் பேசிக் கொண்டிருப்பது என்று பார்த்து பார்த்து செலக்ட் செய்திருக்கிறார்கள்.அதேபோல் வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் போதைப் பொருட்களை பறிகொடுக்கையில்,அவரின் பையன் கையில் இருந்து ஐஸ் கீழே விழுவ‌து டைர‌க்ட‌ர் ட‌ச்.

யுவ‌ன்ச‌ங்க‌ர் ராஜாவின் பின்ன‌ணி இசை,வினோத்தின் ஒளிப்ப‌திவு ம‌ற்றும் ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்க‌ள்('புத்த‌ருக்கு போதிம‌ர‌ம் மாதிரி,கேங்ஸ்ட‌ர்சுக்கு சேசிங்','ப‌ய‌ம் போக‌லை;ஆனால் தைரிய‌ம் வ‌ந்திடுச்சு','கப்பு பார்த்தா மப்பு இல்லை') ந‌டிக‌ர்க‌ளின் தேர்வு என்று அனைத்துமே மிக‌ சிற‌ப்பாக‌ வ‌ந்திருக்கிற‌து.

ஆர‌ண்யகாண்ட‌ம்-'ஆ'ச்ச‌ர்ய‌ காண்ட‌ம்.

5 comments:

  1. நல்ல படத்துக்கு மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    இப்படம் பற்றி நானும் பதிவெழுதி உள்ளேன்.பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  2. அந்த வாழ்ந்து கெட்ட ஜெமிந்தார்,சிறுவனின் நடப்பு அசத்தல்.
    ஒளி பதிவு,பின்னனி இசை,வசனம் மற்றூம் படபிடிப்பிற்க்காக தெர்ந்தெடுத்த இடங்கள்
    இவையே படத்தை முன்னேடுத்து செல்கின்றன.

    ReplyDelete
  3. @ உலக சினிமா ரசிகன்!

    வருகைக்கு நன்றிங்க! உங்கள் விமர்சனமும்,பிளாக்கும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. @ கா.பழனியப்பன்!

    நன்றி பழனி!

    ReplyDelete
  5. பார்க்கவே முடியலை..அப்படியொரு குப்பைப் படம்..எப்படித்தான் பொறுமையாப் பார்த்தீங்களோ தெரியாது..அதில் வேற சிலுக்குவைப் பிடிக்கும்னு வேறு சொல்றா..அவரை யாருக்காவது பிடிக்குமா?

    நல்லவேளை இந்தப் படத்துல நடிக்க த்ரிஷா ஒத்துக்கல.. நடிச்சிருந்தா அவா இமேஜே போயிருக்கும். இந்தப் படத்துக் கதாநாயகி ஒரு ஒம்போது ஜாடையில இருக்கா..எங்கிருந்துதான் தேடிப் பிடிச்சாங்களோ?

    சார்..நல்ல பட விமர்சனங்களா எழுதுங்க.. நீங்க எழுதப் போற மங்காத்தா விமர்சனத்துக்காக காத்திருக்கேன்.

    ReplyDelete