Tuesday, January 12, 2010

நிராகரிப்பு



தனிமை என்னை
கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத் தொடங்கிய
வெம்மையான ஒரு பகல் வேளையில்
எறும்பு ஒன்று என்னுள்
ஊர்ந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் பிரியங்களையும்,வலிகளையும்
எறும்பின் மேல் ஏற்றிவிட்ட கணத்தில்
பாரம் தாங்காமல் கீழே விழ ஆரம்பித்தது
என் பிரியங்களை
என்னிடமே விட்டு விட்டு...

[உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது]

11 comments:

  1. வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  2. ரொம்ப நன்றிங்க!
    உங்களுக்கும் இனிய 'பொங்கல்' நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வெற்றி பெற வாழ்த்துகள்

    பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கணத்தில்
    பாரம்
    இரண்டு வார்த்தைகளை உபயோகித்த விதம் அருமை. வலியை மட்டும் சுமக்கும் எறும்பு இருந்தால் எங்கிருக்கிறது என்று சொல்லுங்கள். தயவு செய்து.

    ReplyDelete
  6. @ திகழ்!

    முதல் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. @ அதி பிரதாபன்!

    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  8. @ பின்னோக்கி!

    என்னோட வலியை எடுத்துக்கிறதுக்கு ரெடியாக இருக்கிற எறும்பு கூட,அதே நேரத்தில் என்னோட பிரியங்களை நிராகரிச்சுடுதுன்னும் எடுத்துக்கலாம்.இல்லையென்றால்,என்னோட வலியெல்லாம்,எறும்பால் தாங்கக் கூடிய அளவுக்கு மிகக் குறைவானதுன்னும் எடுத்துக்கலாம்.எது எப்படியோ அந்த 'எறும்பை' கண்டுபிடித்தவுடன் உங்களுக்கு தகவல் சொல்லி விடுகிறேன்.

    ReplyDelete
  9. @ சக்தியின் மனம்!

    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete