பவர் கட்டான
ஒரு அமாவாசை இருட்டில்
நீ சிரிக்கத் தொடங்கினாய்
திசை மாறிய பறவைகளெல்லாம்
கூட்டை நோக்கிப் பறக்கத் தொடங்கின.
நல்ல கவிதையின்
ஒவ்வொரு வரிகளும்
அழகாய் இருப்பது போல்
அழகாய் இருக்கும் உன்னில்
ஒவ்வொன்றும் அழகு.
ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்கள்
இருந்தாலும் எனக்கான
விடிவெள்ளியாய்
நீ மட்டுமே தெரிகிறாய்.
அடிக்கிற கைதான் அணைக்குமாம்
ஒரு அடி அடித்துவிட்டு
அணைத்துக் கொள்ளேன் என்றால்
தலையில் கொட்டி விட்டு
தேய்த்து விடுகிறாய்.
சந்திரகிரகணத்தை
நான் நேரில் பார்த்தது
நீ தாவணியை
சரி செய்யும் போதுதான்.
வழிந்தோடுகிறது காதல் ஒவ்வொரு வரிகளிலும்... அருமை. முதல் பத்தி/கவிதையைத் தவிர மற்றவை மிக அருமை
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDelete@பின்னோக்கி!
ReplyDeleteநன்றி பின்னோக்கி!
@தியாவின் பேனா!
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க!
கவிதை நல்லா இருக்கு
ReplyDeleteNice one Mohan. Simply superb. Like it verrrrrrryyyyyyyyyyyyyyyy much. Luv is expressed neatly and gently... Especially the 2nd and the 4th stanza are awesome. I kept reading it 3 to 4 times (ha ha ha)
ReplyDelete@சுப்பு!
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க!
@ Niranjan.H!
ReplyDeleteThanks Niranjan:-). Your blog Template is Superb now.
உங்க கவிதைகள் அனைத்தும் அருமையா இருக்கு, வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDelete