
கோபப்படுகையில்
அழகாய் இருக்கிறாய் என்றதற்கு
கோபப்பட்டாய்!
எங்கே பார்த்து விடுவேனோ என்று
நீ சேலைத் தலைப்பை
சரி செய்யும் போதெல்லாம்
பார்க்காத குற்றவுணர்ச்சியில் நான்!
உன் இதழ் ரேகைகளைப்
பிரதியெடுக்கத் தொடங்கியதில்
என் ஆயுள் ரேகை அதிகமாகிவிட்டது!
நான் குளித்துவிட்டு வருகையில்
எனக்கான துண்டு
உன் அழகிய நீண்ட கூந்தல்தான்!
என் தலைமுதல் பாதம் வரை
ஒவ்வொரு நரம்பாய் இழுத்து
அழகிய கோலமிட்டவள் நீ!
தலை சாய்த்து
உதடு சுழித்து
புருவம் உயர்த்தி
நான் ஏன்
உன் இரு கைகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாய்
மார்புக்கு குறுக்கே
கைகளைக் கட்டிக்கொண்டு!.