சிவா மனசுல சக்தி பட இயக்குனர் 'ராஜேஷ்' இயக்கத்தில் ஆர்யா,சந்தானம்,நயன் தாரா நடிப்பில் வந்திருக்கும் படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்.
இப்பவும் கூட போரடிக்கிறபோதெல்லாம் நான் பார்க்கிற படம் சிவா மனசுல சக்தி(முதல் பாதி மட்டும்). அதனால் இந்த படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து போனேனோ,அதை முழுவதுமாய் நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர்.
வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தன் அரியர் படிப்பை படித்துக்கொண்டிருக்கும் ஆர்யாவின் வாழ்வில் நயன் தாரா வருகிறார். அதன் பின் ஆர்யா எவ்வாறு திருந்தி,முன்னேறி,நயன் தாராவைக் கைப்பிடிக்கிறார் என்பதைக் காமெடியைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
பிட்டு கிட்டு அடித்தாவது பாஸாகிவிடு என்று சொல்லும் அம்மா,பிட்டு எடுத்துட்டு போனா மட்டும் பத்தாது;பாஸாகியும் காட்டிடனும் என்று சொல்லும் அண்ணன்,தனக்கு இருக்கும் ஒரே நண்பனுக்காக எதையும்(?) செய்யத் தயாராகவிருக்கும் சந்தானம்,வேலை வெட்டியே இல்லாத காதலன் மேல் நம்பிக்கையோடு காத்திருக்கும் நயன் தாரா, யாரைப் பற்றியும்,எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியிலேயே வாழும் ஆர்யா என்று இவர்களை மட்டும் சுற்றி செல்லும் கதையில்,ஒவ்வொரு சீனையும் காமெடியாக மட்டுமே காட்டுவது என்று கங்கனம் கட்டி எடுத்திருப்பார்கள் போல்,படம் முழுவதும் தொடர்ந்து காமெடி சரவெடி.
ஆர்யா முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.இன்னும் கொஞ்சம் நன்றாகவே பண்ணியிருக்கலாம் என்று தோன்றினாலும்,தன்னால் முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்.சந்தானம் ஷகிலாவை கூப்பிட்டு வருவதைப் பார்த்து அவங்களை 'இங்க' ஏண்டா கூப்பிட்டுட்டு வந்த என்பதும்,அண்ணாமலை படத்தைப் பார்த்து விட்டு கனவுலகிலிருந்து திரும்பியவுடன்,எங்கே என் டிரைவர் நல்லதம்பி(சந்தானம்) என்பதும்,"உன் 'எக்ஸ்பீரியன்ஸைப்' பத்தி எனக்குத் தெரியாதா?" என்று சந்தானம் காலை அடிக்கடி வாருவது என்று நன்றாகவே பண்ணியிருக்கிறார்.வீட்டை விட்டு உணர்ச்சிவசப்பட்டு ஆர்யா வெளியேறும் காட்சியிலும்,அவர் கூலிங் கிளாஸை எடுத்துப் போட்டு செல்கையில் நம் அடி வயிறு குலுங்க ஆரம்பிக்கிறது.
ஆர்யாவிற்கு இணையான வேடம் சந்தானத்திற்கு.ஆர்யாவும்,இவரும் அடிக்கடி சேர்ந்து சொல்லும் 'நண்பேன்டா' என்பதாகட்டும்,பிஸினெஸ் சரியாகப் போகாத போதெல்லாம்,குடும்பத்தோடு தெருவில் நிற்பது போல் நினைத்துப் பார்ப்பதாகட்டும்,திட்டுற மூடு இல்லாமலேயே உங்களை எவ்வளவு திட்டியிருக்கிறான் பாருங்கள் என்று நயன் தாரா அப்பா சித்ரா லட்சுமணனிடம் ஆர்யாவைப் பற்றி போட்டுக் கொடுப்பது,அட்வான்ஸ் கேட்கும் இன்ஸ்டிடியூட் வாத்தியாரிடம் "பல்லு விளக்குறதுக்கு முன்னாடியே பாயாசம் வேணுமா?" என்று கிடைத்த வாய்ப்பை சந்தானம் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
நயன் தாரா சிரிக்கும் போது(மட்டும்) அழகாக இருக்கிறார்.படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.நயனுக்கு இப்போதெல்லாம் நடனம் வேறு நன்றாகவே வருகிறது(ம்..ம்).
ஜீவா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார். சரக்கு அடிக்கையில் ஊறுகாய் தீர்ந்தவுடன்,தொட்டுக்கொள்வதற்கு சித்ரா லட்சுமணனைப் பக்கத்தில் உட்கார சொல்வது என்று அவரும் தான் வரும் காட்சிகளில் கலகலப்பாக்கிவிட்டு செல்கிறார்.யுவனின் இசையில் 'பாஸு பாஸு' மற்றும் 'யார் இந்த பெண்தான்' பாடலும்,பின்னணி இசையும் நன்றாக இருக்கின்றன.படத்தில் வரும் ஒரே ஒரே சண்டைக்காட்சியையும் காமெடியாக மாற்றியிருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் தெரிகிறது.இயக்குனர் இளையராஜா ரசிகராக இருப்பார் போலும்.படம் முழுவதும் ஆங்காங்கே இளையராஜா பாடல்கள் வருகின்றன.
படம் 2:40 நிமிடங்கள் ஓடுவதால்,படத்தில் சுவாரசியமில்லாமல் வரும் சில காட்சிகளை இயக்குனர் நீக்கியிருந்திருக்கலாம்.அதேபோல் டபுள் மீனிங் வசனங்களையும் நீக்கியிருந்தால்,படம் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
முழு நீள காமெடிப் படம் எடுக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்நேரத்தில்,இயக்குனர் ராஜேஷ் நம்பிக்கை ஊட்டுகிறார்.
பாஸ் என்கிற பாஸ்கரன்-தமாஸ்.
சி.ம.ச ரசித்துப் பார்த்த படம். இதிலும் ஏமாற்றவில்லை என்பது நற்செய்தி.
ReplyDeleteநயனுக்கு கொஞ்சம் டொக்கு விழுந்த மாதிரி இருக்கு :).
உங்கள் விமர்சனம் கனகச்சிதம்.
ReplyDeleteGOOD REVIEW MOHAN SIR,
ReplyDeleteMANO
@ பின்னோக்கி!
ReplyDeleteதயங்காமால் இந்தப் படத்தையும் பார்க்கலாம்.பில்லாவுக்கு முன்னாடிதான் நயன் நன்றாக இருந்த மாதிரி தோன்றுகிறது.
@ சி.பி.செந்தில்குமார்!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!
@ MANO!
ReplyDeleteTHANKS MANO!
மன்மதன் அம்பு கூட இந்த பாஸ் என்கிற பாஸ்கரன் போல முழு நீள
ReplyDeleteநகைச்சுவை படமாக அமையும் பட்சதில் நமகெல்லாம் இரட்டிப்பு
மகிழ்ச்சி