தன்னுடைய அக்காவின் வாழ்வை சீரழித்தவர்களை, தம்பி 'சிவனாக' மாறி பழிவாங்கும் 'புதுமையான' கதைதான் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈசன்' படத்தின் கதை.
முதல் பாகம் முழுவதும் அரசியல்வாதியான அழகப்பனின் அட்டூழியங்களும்,அவரின் பையன் வைபவ் அவருடைய நண்பர்களுடன் அடிக்கும் கொட்டங்களும்,அவருக்கும் பிஸினெஸ் மேக்னட்(விஜய் மல்லையா(?)) ஒருவரின் பெண்ணிற்கும் நடக்கும் காதலை நாடகப் பாணியிலும், இரண்டாவது பாதியில் போலிஸான சமுத்திரக்கனி எவ்வாறு 'தொலைந்து போன' வைபவ்வைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதையும், அபினயாவின் கிராமத்து வாழ்க்கையையும் கொஞ்சம் விறு விறுப்பாக சொல்ல முயற்சித்து தோற்றிருக்கிறார் சசிக்குமார்.
படத்தின் பெரிய பலவீனமே படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு மெயின் கேரக்டர்களின் வாழ்க்கையையும், மிகவும் விலாவரியாகச் சொல்லியிருப்பது.வைபவ் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்கிறார் என்பதற்கே மூன்று பாடல்கள்(இதுதான் இயக்குனர் அனுராக் காஷ்யப் 'தேவ்டியில், சசிக்குமாரைப் பாதித்த விதமா)என்றால் என்ன சொல்வது?.இதற்கு நடுவில் அரசியல்வாதிக்கும்,பிஸினஸ்மேனிற்கும் நடுவில் நடக்கும் ஈகோ வேறு.பின்பாதியில் அபினயாவின் கிராமத்துக் காட்சிகளும்,அவருடைய அப்பாவான மலையாள இயக்குனர் பிளெஸ்ஸிக்கு வரும் சாமி அருள் என்று அதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதினால், இந்தப் பதிவும் படம் போன்றே, படிப்பவர்களை சோர்வடையச் செய்யும்.அதிலும் படம் முடிந்தது என்று நினைக்கையில் வரும் வன்முறைக் காட்சிகள் 'வெந்த புண்ணில் வேல்'
படத்தின் ஒரே ஆறுதல் 'கண்ணில் அன்பை சொல்வாளே' பாடலும்,அப்பாடல் படமாக்கப்பட்ட விதமும்தான்.அபினயாவின் தம்பியாக நடித்திருக்கும் பையனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.1980 களில் நடப்பது போன்ற கதையானாலும் 'சுப்ரமணியபுரம்' மாடர்னாக எடுக்கப்பட்டிருந்தது. மாடர்ன் உலகத்தைப் பற்றிப் பேச முயற்சிக்கும் 'ஈசன்' ,1980 களில் வெளிவந்த படம் போன்று இருக்கிறது.
இந்தப் படம் பார்க்க வருவதற்கு முன்பு 'சுப்ரமணியபுரம்' படத்தை மறந்துட்டு தியேட்டருக்குள் வாங்க என்று தன்னுடைய பேட்டியில் சசிகுமார் சொல்லியிருந்தார். ஆனால் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு உடனே மறந்துவிடுவது நமக்கு நல்லது.
ஈசன்- ஈ.ஈ.ஈ
சசிக்குமார் தேவையில்லாமல் பப் பார்ன்னு கதை தளத்தை தேர்ந்தேடுத்துட்டாரு.
ReplyDeleteஅவருக்கு கிளிக்காகும்னு நான் நினைக்கிறது எல்லா மதுரையை சுத்தி நடக்குற மக்களின் வாழ்வு மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயமாத்தான் இருக்க முடியும்.
தீ மாதிரி வேல செய்யனு சசிக்குமார் !! உழைப்புதான் உங்களை உயர்த்தும் !!!
நன்றி பழனி. சசிக்குமாரோட அடுத்த படத்தைப் பார்க்கும்போதுதான்,அவர் தீ மாதிரி உழைச்சிருக்கிறாரா என்று தெரியவரும்:-)
ReplyDelete